குழந்தையை கொன்ற கொடூர தாயின் போனில் ஆபாச வீடியோக்கள்
குமரியில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததாக பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாயின் செல்போனில் ஆபாச வீடியோ படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கச்சியை சேர்ந்த கட்டிட தொழிலாளர் ஜெகதீஷ் இவருடைய மனைவி கார்த்திகா இவர்களுக்கு 4 வயதில் மகளும், 1½ வயதில் மகனும் இருக்கிறார்கள். கார்த்திகா மார்த்தாண்டம் அருகே மாராயபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார் கார்த்திகாவுக்கு திருமணம் ஆகவில்லை என நினைத்த அந்த வாலிபரும் கார்த்திகாவை காதலித்துள்ளார்.சிறிது காலத்தில் கார்த்திகா திருமணமானவர் என்பதும் அவருக்கு குழந்தைகள் உள்ள விவரமும் அந்த வாலிபருக்கு தெரியவந்தால் அந்த வாலிபர் கார்த்திகாவை விட்டு விலகத் தொடங்கினார். அதனால் கவலையடைந்த கார்த்திகா தன்னை கைவிட்டு விடக் கூடாது என அந்த வாலிபரிடம் கெஞ்சினார். எனினும் அந்த வாலிபர் முழுமனதோடு அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
குழந்தைகளால் தான் தனது காதல் நிறைவேறவில்லை என நினைத்த கார்த்திகா தான் பெற்றெடுத்த இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார் அதன்படி இரண்டு குழந்தைகளுக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதில் ஒன்றரை வயது மகன் பலியானான் மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மார்த்தாண்டம் போலீசார் கொலையாளி கார்த்திகாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்து தக்கலை பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | 27 ஆண்டுகளுக்கும் மேலாக சாராய சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் மகேஸ்வரி..!
முன்னதாக கார்த்திகாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து போலீசார் கூறியதாவது., கார்த்திகாவுக்கும் வாலிபருக்கும் இடையே மூன்று மாதங்களுக்கு முன்புதான் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் தனது கணவன் மற்றும் குழந்தைகளை விட கள்ளக்காதலனையே அதிகமாக நேசித்துள்ளார். தனது கள்ளக் காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய அவர் முன் வந்துள்ளார். அந்த வகையில்தான் தான் பெற்றெடுத்த இரண்டு குழந்தைகளையும் கொல்லும் கொடூர மன நிலைக்கு அவர் சென்றுள்ளார். தனது குழந்தைகளை கழுத்தை நெரித்து கொல்லவே முதலில் அவர் நினைத்துள்ளார். ஆனால் அவ்வாறு செய்தால் மாட்டிக் கொள்வோம் என்பதால் தனது முடிவை மாற்றி யூடியூப்பை பார்த்து உணவில் விஷம் கலந்து கொடுத்து கொல்லும் கொடூர முடிவுக்கு வந்து அதை அரங்கேற்றியுள்ளார்.
கார்த்திகா போலீஸ் வலையில் சிக்கிய பிறகு அவரது செல்போனை வாங்கி சோதனையிட போலீசார் முடிவு செய்து செல்போனை கேட்டபோது கார்த்திகா தர மறுத்துள்ளார். ஒரு சிறிய விசாரணைக்காக தான் கேட்கிறோம், உடனே தந்து விடுகிறோம் என போலீசார் அவரிடம் தெரிவித்து செல்போனை அவரிடமிருந்து வாங்கி இருக்கின்றனர். கார்த்திகாவிடம் இருந்து வாங்கிய செல்போனை ஆய்வு செய்த போது கார்த்திகா அவருடைய கள்ளக்காதலனிடம் ஒரு நாளைக்கு 15 தடவைக்கு மேல் பேசியிருந்ததும் அதுவும் அவரிடம் மணிக்கணக்கில் பேசியதும் தெரியவந்தது.
கள்ளக்காதலனுடன் செல்போனில் பேசும் நேரங்களில் கார்த்திகா தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை வாட்ஸ் அப்பில் கள்ளக்காதலனுக்கு அனுப்பி உள்ளார். மேலும் கார்த்திகாவின் செல்போனில் ஏராளமான வீடியோக்களும் இருந்தன. அதில் கார்த்திகா ஆபாசமாக இருக்கும் வீடியோக்களே அதிகமாக இருந்தன. கார்த்திகா குளிக்கும்போதும் உடை மாற்றும் போதும் வீடியோக்களாக பதிவாக்கி கள்ளக்காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
3 மாதமாக தான் அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அந்த நேரங்களில் அவர்கள் பல இடங்களுக்கு சென்று ஜாலியாக சுற்றியுள்ளனர். போலீஸ் நிலையத்தில் கள்ளகாதலனிடம் விசாரணை நடத்தியபோது அவருக்கு ஒன்றும் தெரியாது. எனக்கு திருமணம் ஆகவில்லை என்பதால்தான் அவர் என்னுடன் பழகினார். அவரை விட்டுவிடுங்கள். கஷ்டப்படுத்தாதீர்கள் என்று தனது கள்ளக்காதலனுக்காக அந்த நிலையிலும் பரிந்து பேசினார். இரக்கமற்ற தாயான கார்த்திகா தற்போது தக்கலை கிளை சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். தற்போது கார்த்திகா சிறையில் அழுது கொண்டேயிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | மாணவர்களை மயக்கி ஆசிரியை உல்லாசம் - கசிந்த வீடியோ..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR