ஒடிசாவில் தற்போது நடந்துள்ள ரயில் விபத்து இந்திய அளவில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வரை இதில் 280க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இது தாண்டி பல பேர் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றது, இந்த நிலையில் விபத்து எப்படி நடந்தது என அரசு தரப்பு விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து ஒரு பக்கம் நடந்து வந்தாலும் இந்தியாவைப் பொறுத்த வரை இதுபோன்று பல சம்பவங்கள் நடந்து வந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசியல் ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்திய விபத்து 


முக்கியமாக தமிழ்நாட்டின் மொத்த இந்தியாவை உலுக்கியுள்ளது…பலி எண்ணிக்கையைத் தாண்டி அரசியல் ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு பெரும் விபத்தாகும்..‌. 1956 ஆம் ஆண்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி புறப்பட தயாராக இருந்தது. ரயிலில் ஏறிட மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்தனர், அவர்களுக்கு தெரியாது அந்த ரயில் பயணம் தான் தங்களின் இறுதி பயணம் என்று. தமிழக ரயில் பயண வரலாற்றில் ரத்தம் சதையென கலந்த கதை இது. 


மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி தப்பித்தவரின் நேரடி வாக்குமூலம்... சம்பவ இடத்தில் நடந்தது என்ன?


சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1956ம் ஆண்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வண்டி எண் 603 சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் அந்த ரயிலில் தூத்துக்குடி செல்லும் பயணிகள் மட்டுமின்றி விழுப்புரம், திருச்சி, மதுரை பயணிகள் என்ன மொத்தம் 700 மேற்பட்டோருடன் புறப்பட ஆரம்பித்தது. இந்த ரயிலில் பதிமூணு பெட்டிகள் இருந்தன, அதிலிருந்த கடைசி பெட்டி தூத்துக்குடி வரை செல்லும்.  கடைசி பெட்டியான 13 ஆம் நம்பர் பெட்டியை விருதாச்சலத்தில் சேலம் செல்லும் ரயிலுடன் இணைத்து அனுப்பி வைக்கப்படும். தூத்துக்குடி ரயிலை துரைசாமி என்ற ஓட்டுநர் ஓட்டினார். இவருடன் முனுசாமி கோதண்டன் ஆகியோர் நிலக்கரியை அள்ளிப் போடுவதற்காக இவருடன்‌ பணியில் இருந்தனர். வேகம் எடுத்த ரயில் தாம்பரம் செங்கல்பட்டு வழியாக விருத்தாசலத்தை அடைந்தது அங்கு ரயிலில் இருந்த கடைசி பெட்டி மற்ற ரயிலில் இணைக்கப்பட்டு புறப்பட்டது. மீதமுள்ள 12 பெட்டிகளுடன் மீண்டும் பயணத்தை தொடர்ந்தது தூத்துக்குடி ரயில்.


வடகிழக்கு பருவமழைதான் விபத்துக்கு காரணம் 


வடகிழக்கு பருவமழை காரணமாக வழி முழுக்க பணியும் மலையும் கொட்டி தீர்த்தது, அப்போது ஓட்டுநர் துரைசாமிக்கு ரயிலை ஓட்டுவதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால் ரயிலை ஓட்டாமல் மெதுவாக நகர்த்தி கொண்டு அரியலூர் வரை சென்று உள்ளார். அரியலூர் ரயில்வே நிலையத்திற்கும் திருச்சிராப்பள்ளி ரயில்வே நிலையத்திற்கும் நடுவே மருதையார் ஆற்று பாலம் உள்ளது. இதனை தாண்டி தான் அரியலூர், கல்லகம், திருச்சிராப்பள்ளி, ஆகிய ஊர்களுக்கு ரயில் செல்ல முடியும். மருதையார் ஆற்று பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. வெள்ளப்பெருக்கு அதிகரித்துக் கொண்டே இருந்தது. வெள்ளப்பெருக்கு ரயில் பாலத்தை அறிக்க தொடங்கியது.  பாலம் பலவீனமாக மாற தொடங்கியது, காலை 5.30 தூத்துக்குடி ரயில் மருதையாற்று பாலத்தை நெருங்கியது. 


ஆபத்து ரயில் ஓட்டுனர் துரைசாமிக்கு தெரியவில்லை


மழைக்காலம் என்பதால் இருட்டாக இருந்துள்ளது. அங்குள்ள ஆபத்து ரயில் ஓட்டுனர் துரைசாமிக்கு தெரியவில்லை. ரயில் பாலத்தில் ஏறிய ஐந்தாவது நொடியில் ரயில் ஆற்றுக்குள் சரிய தொடங்கியது. தூக்கத்திலிருந்த பயணகள் கண்விழித்துப் பார்ப்பதற்குள் விபத்து நடந்து முடிந்து விட்டது. பயணிகளின் கதறல் சத்தம் கூட வெளியே கேட்கவில்லை. ஏழு பெட்டிகள் தண்ணீரில் மூழ்க ஒரு பெட்டி ஆபத்தான நிலையில் பாலத்தில் தொங்கியபடி இருந்தது. மீதமுள்ள 4 பெட்டிகள் தடுமாறிக் பாலத்தின் மீது இருந்தன. பதட்டத்தில் மக்கள் அலற ஆரம்பித்தனர். 


மேலும் படிக்க | 20 நிமிடங்களுக்குள் மூன்று ரயில்கள் மோதி விபத்து! பயணிகளின் நிலை என்ன? கள நிலவரம்


மீட்பு பணிகள் மிக விரைவாக நடந்தது


அரியலூர் ரயில்வே நிலையத்திற்கு தகவல் கிடைத்த பிறகு மீட்பு பணிக்காக காவல்துறை தீயணைப்பு துறை ரயில்வே துறையும் உள்ள உடனே அனைத்து துறைகளும் அரியலூருக்கு சென்றனர். திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் எஸ் மலையப்பன் அவர்களின் தலைமையில் மீட்பு பணிகள் மிக விரைவாக நடந்தது. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலரின் உடல் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பாதி உடலை மீட்க முடியாமல் மீட்பு பணி திணறியது. மொத்த பயணிகளில் 161 பேர் உயிரிழந்துவிட்டதாக ரயில்வே துறை அறிவித்தது. 89 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிர் தப்பிய 13 பேர் தங்களது உடைமைகளை இழந்துள்ளனர். வெள்ள நீர் வடிந்து ஆறே நாட்களில் மருதையார் மீண்டும் அது இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் உடல்நிலை தேடும் பணிகள் நான்கு நாளுக்கு மேல் தொடர்ந்தது. 


தனது பதவியை ராஜினாமா செய்த லால்பகதூர் சாஸ்திரி


ரயில்வே துறை மந்திரியாக லால்பகதூர் சாஸ்திரி இருந்தார். ரயில் விபத்துக்கு முழுப்பொறுப்பேற்று அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், லால்பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இந்த ரயில் விபத்தின்போது, கடைசி பெட்டியில் இருந்த கார்டுகளான வைத்தியநாதசாமி, ஆறுமுகம் மற்றும் பின்வரிசை பெட்டிகளில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். அந்த விபத்து நடந்து 65 ஆண்டுகள் கடந்திருந்தாலும், அதில் இருந்து தப்பியவர்களில் ஒரு சிலர் இன்னும் உயிரோடு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. வரலாற்றில் கருப்பு எழுத்துகளால் பதிவான இந்த கோர நிகழ்வு இத்தனை ஆண்டுகள் கடந்தாலும், நெஞ்சை கசக்கிப் பிழியத்தான் செய்கிறது.


மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்து: சிக்னல் கோளாறா... மனித தவறா... - சாத்தியக்கூறுகள் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ