கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலானது ஒடிசாவின்,  பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி அருகில் செல்லும் மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதே வழித்தடங்களில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயிலும், சரக்கு ரயில் ஒன்றும் தடம் புரண்ட பெட்டிகள் மீது விபத்துக்கசென்றுள்ளனர். இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் உடனடியாக விரைந்தனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணிகள் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஒடிசாவில் விபத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? - முதலமைச்சர் ஸ்டாலின் பதில்


தேசிய, மாநில மீட்பு படையினருடன் விமானப்படையினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். விபத்து நடைபெற்றது இரவு நேரம் என்பதால் கடும் சவால் ஏற்பட்டது. ஆனால் விடிய விடிய நடந்த மீட்பு பணியில் இதுவரை 288 பேர் பலியாகியுள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த 100 பேர் வரை, பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


இதில் 30 பேர் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் விபத்து ஏற்பட்டும் பாதிப்பு ஏற்படாத தொடர்வண்டி பெட்டிகளில் பயணம் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் தாங்களாகவே சென்னை திரும்பியுள்ளனர். சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த ராஜலஷ்மி, ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த நாகேந்திரன், நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பல்லாவரம் பகுதியை சேர்ந்த ராஜலஷ்மி, தொடர்வண்டியில் பி8 பெட்டியில் பயணித்திருந்தோம். தனக்கு முன்னால் இருந்த பெட்டியில் தடம் புரண்டு பெரிய விபத்துக்கள் ஆனது. ஆனால் நான் இருந்த பெட்டியில், பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை. தொடர்வண்டி குலுங்கி மட்டுமே செய்துள்ளது. விபத்து நடைபெற்ற பகுதியிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் தேசிய நெடுஞ்சாலை இருந்ததால் அங்கிருந்து நடந்து வந்து பேருந்து மூலம் புவனேஸ்வர் அடைந்தோம். 


தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பிலும் ரயில்வே நிர்வாகம் சார்பிலும் தொலைபேசி மூலமாக தங்களை குறித்து விசாரித்துக் கொண்டே இருந்ததாக தெரிவித்தனர். அரசு உதவி இல்லாமல் தாங்களாகவே வந்ததாக தெரிவித்தனர். இதனை அடுத்து நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, கடவுள் கொடுத்த மறு வாய்ப்பாக இதை பார்க்கிறேன். தமிழ்நாடு அரசு பேசிக் கொண்டிருந்தனர். உள்ளூர் மக்கள் நிறைய உதவியாக இருந்தார்கள். மீட்பு குழுவினர் வருவதற்கு முன்பாகவே உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர் என தெரிவித்தார்.


மேலும் படிக்க | கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து! ஏன் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ