பொதுவாக மேடையில் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது, எதிரில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்கள் தூங்கி வழிவது போய், தற்போது மேடையில் அமர்ந்திருப்பவர்களே தூங்கி வழியும் காலமிது. அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் அது ஓர் கல்லூரி விழா நிகழ்ச்சி. கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போது மாணவர்கள் முன்னிலையில் மேடையிலேயே அதிகாரிகள் அனைவரும் தூங்கிய சம்பவம் மாணவர்கள்  மத்தியில் பெரும்  நகைப்பை ஏற்படுத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மத நம்பிக்கைக்கு சான்றிதழ் அளிக்க எம்.ஆர்.காந்தி யார்?... விளாசிய அமைச்சர் மனோ தங்கராஜ்


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நான் முதல்வன் கல்லூரி கனவு விழா நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை தாங்கினார். அவருடன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர், ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர், ராமநாதபுரம் ஆட்சியர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், அமைச்சர் உரை நிகழ்த்திக்கொண்டிருக்க அதிகாரிகள் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார்கள். 


அமைச்சர் பேசத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக கொட்டாவி விட்டு தூங்கி விழுந்தார்கள். அமைச்சர் பேசிய 10 நிமிடத்திற்குள் அதிகாரிகள் தூங்கி விழுந்தது மாணவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. மேடையிலிருந்த முன்னாள் தி.மு.க.மாவட்ட செயலாளர் திவாகரன், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் புல்லாணி, வருவாய் அலுவலர் காமாட்சி, மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் ஆகியோரைத் தவிர்த்து மேடையிலிருந்த பலர் மொரட்டுத் தூக்கம் போட்டனர். 


இதையெல்லாம் முன்னாள் அமர்ந்து  பார்த்துக்கொண்டிருந்த மாணவ மாணவிகள், ‘இதுதான் கல்லூரி கனவா இருக்குமோ’, ‘கனவு காணும் விழாவில் அதிகாரிகள் கனவு காண்கின்றார்களோ’ என்று கலாய்த்தபடி எழுந்துசென்றனர். 


மேலும் படிக்க | படிச்ச முட்டாள்களிலேயே No.1 முட்டாள் அண்ணாமலை - யார் சொன்னது ?


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR