பழைய துரைமுருகனா பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்..!
காட்பாடியில் திமுகவினர் மத்தியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், இம்முறை வட மாநிலங்களில் பாஜகவுக்கு தோல்வி உறுதி என்றார். பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் எதையும் செய்யவில்லை என்றும் விமர்சித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திராவிட முன்னேற்ற கழக வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார். அவர் பேசும்போது, இம்முறை வட மாநிலங்களில் பாஜகவுக்கு தோல்வி உறுதி. 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார். இந்த முறை பாஜக ஆட்சிக்கு வராது என கடுமையாக சாடினார்.
மேலும், பழைய துரைமுருகன் மாதிரி பேசுனா, அடி இன்னும் பலமாக இருக்கும். ஆனால் என்னுடைய வயது, திமுக பொதுச்செயலாளர் மற்றும் அமைச்சர் என்ற பொறுப்பு எல்லாம் இருக்கிறது. ஏதாவது பேசினால், அமைச்சரே இப்படி பேசிவிட்டார், பொதுச்செயலாளரே இப்படி பேசிவிட்டார் என சொல்லுவார்கள். அதனால் கொஞ்சம் நிதானமாக பேச வேண்டியிருக்கிறது என வழக்கம்போல தன்னுடைய கலகலப்பு குறையாமல் பேச்சை ஆரம்பித்தார். அப்போது அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, " பிரதமர் மோடி தமிழகம் அடிக்கடி வந்து எதாவது மீன் சிக்காதா என முயற்சி செய்கிறார். வட மாநிலம் முழுவதும் பாஜகவுக்கு தோல்வி தான் மிஞ்சும். எனவே அடிக்கடி தமிழக வருகிறார்.
இங்கு வந்து அவர் பேசுவது ஒரு பிரதமர் என்ற பொறுப்புக்கு அழகு இல்லாமல் பேசுகிறார். மத்திய அரசு எதையும் செய்யவில்லை. மதுரையில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபடும் என்றார்கள். தற்போது தேர்தல் வருகிறது என்பதற்காக டெண்டர் வைத்துள்ளோம் என்கிறார்கள். மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இதுதான் அவர்களின் செயல்பாடு. மாநில உரிமையை பறிக்கிறார்கள். இந்த முறை பிஜேபி ஆட்சிக்கு வராது." என விமர்சித்தார்.
அடுத்ததாக பாஜகவினர் வாரிசு அரசியல் என்று சொல்கிறார்கள். உங்கள் குடும்பம் போல் தரித்திர நாராயணனாக இருந்து ஆட்சிக்கு வந்தவர்களா நாங்கள்? என பேசினார். பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு நீதிமன்ற வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ளபோது சட்டத்திற்கு புறம்பாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அணையை கட்டவுள்ளனர். இவ்வாறு அணைக்கட்ட கூடாது என ஆந்திர மாநில அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆந்திர முதல்வருடன் இதுகுறித்து பேசுவீர்களா? என கேட்டதற்கு அவர்கள் வேறு பணியில் இருக்கிறார்கள் என கூறினார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ