கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி பேருந்தில் மாணவிக்கும் ஆசிரியருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.  கல்லூரியில் இருந்து வழக்கம் போல் மாணவர்களும் ஆசிரியர்களும் பேருந்துக்குள் ஏறி செல்லும் பொழுது மாணவி அருகில் ஆசிரியை ஒருவர் அமர்ந்திருக்கிறார். அப்பொழுது அந்த மாணவி நீங்கள் யார் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த ஆசிரியை இந்த கல்லூரியின் ஆசிரியர் என தெரிவித்திருக்கிறார். ஆசிரியை என்றால் கழுத்தில் ஐடி கார்டு அணியும் படி மாணவி ஆசிரியரிடம் தெரிவித்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் சண்டை: அங்க ஒரு ட்விஸ்ட், வைரல் வீடியோ 


நான் எதற்கு அணிய வேண்டும் என ஆசிரியை அந்த மாணவியிடம் கேட்டதற்கு, எங்களை மட்டும் அணிய சொல்கிறீர்கள் அல்லவா, நீங்கள் யார் என்று எங்களுக்கு எப்படி தெரியும் என  இரண்டு பேருக்கும் வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்பொழுது வாடி போடி என இருவரும் பேசிக் கொள்ளவே அந்த ஆசிரியை மாணவியை கன்னத்தில் அறைந்து விடுகிறார் அந்த மாணவியும் பதிலுக்கு அடிக்க துணிகின்ற இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.