தொடர்ந்து 2-வது நாளாக தமிழகத்தில் 2000-க்கும் அதிகமான கொரோனா தொற்றுகள்...
தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழகத்தில் 2000-க்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழகத்தில் 2000-க்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளது.
வியாழன் கிழமை வெளியிடப்பட்ட மருத்துவ அறிவிப்பின் படி தமிழகத்தில் புதிதாக 2141 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து மாநிலத்தில் மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 52,334-ஆக அதிகரித்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை மருத்துவ புல்லட்டின் தெரிவிக்கிறது.
மேற்கத்திய கழிப்பறைகளை பயன்படுத்துவதால் COVID-19 பரவலாம்; அதிர்ச்சி தகவல்!...
அதிகப்படியாக சென்னையில் 1373 தொற்றுகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சென்னையின் மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 37,070-ஆக உயர்ந்தது. சென்னையினை அடுத்து செங்கல்பட்டு (3,285), திருவள்ளூர் (2,155), காஞ்சீபுரம் (945), திருவண்ணாமலை (843) மற்றும் கடலூர் (646) தொற்றுகளுடன் வரிசையில் உள்ளது.
இறப்பு எண்ணிக்கை பொறுத்தவரையில் தமிழகத்தில் வியாழக்கிழமை மட்டும் 49 நோயாளிகள் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை 625-ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளையில் தோய் தொற்றில் இருந்து மீண்டு சுமார் 1,017 நோயாளிகள் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், இதையடுத்து மாநிலத்தில் தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை மொத்தம் 28,641-ஆக அதிகரித்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் மொத்தமாக செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 23,065-ஆக குறிக்கப்பட்டது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பணி அளிக்க ரூ.50000 கோடியில் திட்டம்...
தமிழக அரசின் சுகாதாரத்துறை மருத்து புல்லட்டின் படி கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 26,736 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, இந்த எண்ணிக்கை கொரோனாவுக்கு சோதிக்கப்பட்டவர் எண்ணிக்கையினை 8 லட்சத்திற்கும் அதிகமாக கொண்டு சென்றது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 0-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,619-ஆக உயர்ந்தது எனவும் இந்த மருத்துவ செய்திகுறிப்பு குறிப்பிடுகின்றது.