சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வெளியான பிறகு ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


இதனைத் தொடர்ந்து அவர் கூடிய விரைவில் தமிழக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ளார். வரும் 7 அல்லது 9-ம் தேதி அவர் தமிழக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ளார். 


இதனிடையே, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அடுத்த முதல்வர் பதவியேற்கும் வரை அவரே முதல்வராக நீடிக்கவும் ஆளுநர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.


இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்:-


சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த பிறகு மீண்டும் ஓ.பன்னீர்செல்வமே தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் என்று கூறினார். மேலும், தமிழக உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் அதிமுக அரசின் அச்சம் வெளிப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.