சென்னை: சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கஞ்சாவை விற்க வந்த நபரை மருத்துவமனையின் ஊழியர்கள் மற்றும் டீன் உள்ளிட்டோர் பிடித்து  காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த செய்தி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் இருந்து ஒன்பது கிலோ கஞ்சாவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கண்ணம நாயுடு என்பவர் கடத்தி வந்திருக்கிறார். அவர், மருத்துவமனை என்பதால் காவல்துறையினரின் கெடுபிடி இருக்காது என்பதால் இங்கு வைத்து கஞ்சாவை மற்றொரு நபரிடம் விற்க திட்டமிட்டுள்ளார். அவரின் இந்த துணிச்சலான போக்கு போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கண்ணம நாயுடுவின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமான இருந்ததால், மருத்துவமனை ஊழியர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். விசாரித்ததற்கு சரியான பதிலை சொல்லாமல், சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்துக் கொண்டார் கண்ணம நாயுடு. இதையடுத்து, அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், மருத்துவமனை நர்சுகள் மற்றும் ஊழியர்கள் பிடித்து டீனிடம் ஒப்படைத்துள்ளனர்.


மேலும் படிக்க | பிரதமர் மோடியின் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் 


கண்ணம நாயுடுவைத்திருந்த பையைத் திறந்து பார்த்தபோது, அதில் ஒன்பது கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்ததால் மருத்துவமனையின் டீன் உடைய தேரணிராஜன், கண்ணம நாயுடுவை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்


கஞ்சா பாக்கெட்டுகளுடன் தைரியமாக பொது இடத்திற்கு வந்த கண்ணம நாயுடுவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. 


யாருக்காக கஞ்சா கொண்டுவரப்பட்டது அவர்கள் யார்? இல்லை மருத்துவமனை வளாகத்தில் நோயாளி போல் வேறுவேறு நபர்களுக்கு விற்க வைத்திருத்ததா? இது முதல் முறையா? இல்லை இதுபோல் முன்பு ஏதும் நடந்துள்ளதா என்பது குறித்து கைதான கண்ணம நாயுடுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க | கோவிட்-19 தடுப்பூசியால் மரணம்! இறப்புக்கும் தடுப்பூசிக்கும் இடையில் தொடர்பு உறுதி


சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக உள்ளூர் நோயாளிகள் மட்டுமின்றி தமிழக எல்லைப்பகுதிகளை ஒட்டியுள்ள ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களும் அதிகளவில் வருகின்றனர்.


ரயில் நிலையம் அருகிலேயே சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை உள்ளதால் வரும் நோயாளிகளுக்கும் சிரமமின்றி இருக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட கஞ்சா விற்கும் கும்பல், அரசு மருத்துவமனையை தங்களின் வியாபாரத்திற்கான பாதுகாப்பு இடமாக கருதி நோயாளிகள் போர்வையில் கஞ்சா விற்று வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழகத்திற்கு அதிக அளவு கஞ்சாவும் ஆந்திர மாநிலத்தில் இருந்து வருகிறது. 


மேலும் படிக்க | யுத்தத்தின் கொடூரத்தை உணர்த்திய ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் நாள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="350" src= https://zeenews.india.com/tamil/live-tv/embed?autoplay=1&mute=1  width="100%"></iframe>