இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதனையொட்டி சுதந்திர நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று சமூக வலைதளங்களில் அனைவரும் தங்களது முகப்பு படமாக தேசியக்கொடியை வைக்க வேண்டுமென பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். மேலும் தங்களது வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமென பாஜக சார்பிலும் கோரப்பட்டது. இதனையடுத்து பிரதமர் தனது ட்விட்டர் முகப்பு படமாக தேசியக்கொடியை வைத்தார். இந்தச் சூழலில் முதலமைச்சர் ஸ்டாலினும் தேசியக்கொடியை முகப்புப் படமாக வைத்திருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அந்தப் புகைப்படமானது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், அவருக்குப் பின்னால் உயரமான கம்பத்தின் மீது இந்திய தேசியக் கொடி பறக்க, கருணாநிதி படிகளில் இறங்கும்படி இருக்கிறது.
மேலும் அந்தப் புகைப்படத்துடன், ஆகஸ்ட் 15-ஆம் நாளன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்” எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, தேசியக்கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டுமென பிரதமர் கூறியது சமூக வலைதளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது. அதுமட்டுமின்றிஇயக்குநர் செல்வராகவன் மூவர்ணக்கொடியை தனது முகப்புப் படமாக மாற்றியதையும் சிலர் விமர்சித்தனர்.
ஆகஸ்ட் 15-ஆம் நாளன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!
#NewProfilePic pic.twitter.com/mWgAtmbQ9L
— M.K.Stalin (@mkstalin) August 4, 2022
இந்தச் சூழலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றியதை அடுத்து, டெல்லி சொல்வதை கேட்கும் நிலைக்கு மு.க. ஸ்டாலின் வந்துவிட்டாரா என சிலர் விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் மாநில முதலமைச்சர்களுக்கு தேசியக் கொடி ஏற்றும் உரிமையை கருணாநிதி வாங்கிக்கொடுத்ததை நினைவுப்படுத்துவம் வகையில்தான் ஸ்டாலின் வைத்த படம் இருக்கிறதென்று திமுகவினர் கூறிவருகின்றனர்.
மேலும் படிக்க | ஊரெல்லாம் விக்குது மதுபானம், ஆனால் டெண்டரை காணோம் - பார் உரிமையாளர்கள் புலம்பல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ