புதுகோட்டை: தீபாவளியையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மஞ்சுவிரட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்ற நிலையில்,ஒரு சோகச் சம்பவமும் நடந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகளவு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு உள்ளிட்ட பாரம்பரிய போட்டி நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக அதிகளவு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாமல் இருந்து வந்தது. 


இந்நிலையில் தமிழகத்தில் மெல்ல மெல்ல கொரோனா வைரஸின் (TN Coronavirus) தாக்கம் குறைந்து வரக்கூடிய சூழ்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அங்கு உள்ள திடலில் மஞ்சுவிரட்டு போட்டி இன்று காலை முதல் நடைபெற்று வந்தது. 


முதலாவதாக மது அடைக்கலம் காத்த அம்பாள் கோவிலிலிருந்து கோவில் காளை அலங்கரிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெறும் திடலில் அவிழ்த்து விடப்பட்டது. 


ALSO READ |  கோவையில் இறந்த யானையின் தந்தத்தை வெட்டி விற்க முயன்ற 3 பேர் கைது


இதன் பின்னர் புதுக்கோட்டை தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை தஞ்சாவூர் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 600 க்கும் மேற்பட்ட காளைகளும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
 
மஞ்சுவிரட்டு போட்டி பாரம்பரிய முறைப்படி போட்டி நடக்கும் திடலில் ஆங்காங்கே காளைகள் அவிழ்த்து விடப்பட்டும் அவிழ்த்து விடப்பட்டு வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கியும் அடக்கவும் முயற்சியும் செய்வார்கள்.
 
இந்த மஞ்சுவிரட்டு போட்டியை காண விராச்சிலை மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.


இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி என்பது வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்படும் பாதுகாப்பான முறையில் நடைபெறும் ஆனால் மஞ்சுவிரட்டு போட்டி பாரம்பரிய முறைப்படி ஆங்காங்கே காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருவதால் பார்வையாளர்கள் ஒருவித அச்சத்துடனேயே போட்டியை கண்டு ரசித்து வந்த நிலையில் எதிர்பாராதவிதமாக பரலி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா (52) என்ற பார்வையாளரை காளை குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 


ALSO READ |  தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்


இதனையடுத்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இதனால் சக பார்வையாளர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். 


400-க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஒரு உயிரிழப்பும் ஏற்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருமயம் வட்டாட்சியர் பிரவீனா மேரி போட்டியை நிறுத்தும்படி உத்தரவிட்டதை தொடர்ந்து மஞ்சுவிரட்டு போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. 


இதனால் மாடுபிடி வீரர்கள் பார்வையாளர்கள் காளை உரிமையாளர்கள் திடலில் இருந்து திரும்பினார். மேலும் எந்தவித அனுமதியும் இன்றி மஞ்சுவிரட்டு போட்டி நடத்தியதாக மஞ்சுவிரட்டு போட்டி அமைப்பாளர்கள் 20 பேர் மீது அனுமதியின்றி ஒன்று கூடுதல், விலங்குவதை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


ALSO READ |  கோவிட் தொற்றுப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR