விருத்தாச்சலம்: கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளாகவே தொடர்ந்து இரு மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விருத்தாச்சலத்தில்  12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்துக் கொள்வது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கள்ளக்குறிச்சி, திருவள்ளூரில் மாணவிகள் தற்கொலை என்ற மாணவிகள் தற்கொலை பட்டியலில், விருத்தாசலம் ஆயர்மடம் பகுதி மாணவியின் மரணமும் இணைந்துவிட்டது.


மேலும் படிக்க | தமிழகத்தில் தொடரும் தற்கொலைகள்; திருவள்ளூரில் பிளஸ் 2 மாணவி தற்கொலை


விருத்தாச்சலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், பெற்றோர்கள் இறுதி சடங்கு செய்ய முற்பட்ட போது, காவல்துறையினர் அதிரடியாக மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்ததால் பரப்பரப்பு நிலவுகிறது. 


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஆயியார் மடத்தை சேர்ந்தவர் கோபி-இளவரசி தம்பதியினர். கோபி விருத்தாச்சலத்தில்  செல் சர்வீஸ் சென்டர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இரண்டாவது மகள் சிவகாமி,  விருத்தாச்சலம் வடக்கு பெரியார் நகரில் அமைந்துள்ள சக்தி மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.


இந்நிலையில் நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவி சிவகாமி, மாதாந்திர தேர்வு எழுதி உள்ளார். தேர்வு எழுதிவிட்டு, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவி சிவகாமி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில், வீட்டில் யாரும் இல்லாத போது,  வீட்டில் உள்ள அறையில் துணியால் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


மேலும் படிக்க | உடல் உறுப்புகள் தானம் மூலம் 'தனயனை காத்த தாய்'


வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மாணவியின் பெற்றோர்கள், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள மகளைக் கண்டதும் கதறி அழுது உள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று, மாணவியின் உடலை தூக்கு கயிற்றில் இருந்து கீழே இறக்கி உள்ளனர். பின்னர் மாணவியின் உடலை அடக்கம் செய்வதற்காக, மாணவியின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள்,  பந்தல் அமைத்து இறுதிச் சடங்குக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.


இந்நிலையில் இது குறித்து விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால், விரைந்து சென்ற காவல்துறையினர், இறுதி சடங்கு காக வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி விவகாரம்: விரைவில் இரண்டாம் கட்ட விசாரணை


இதுகுறித்து மாணவியின் தாயார் இளவரசி கூறுகையில், மாணவி சிவகாமி மிகவும் திறமைசாலி என்றும், கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், சரியாக படிக்க முடியவில்லை என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பதையும் தற்கொலை செய்து கொண்ட மாணவி, இருப்பதற்கு முன்பு கடிதம் ஏதாவது எழுதி வைத்துள்ளாரா? என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தொடர்ச்சியாக தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருவதால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.


விசாரணையில் முடிவில்தான் மாணவியின் மரணம் தொடர்பான மர்மம் வெளியாகும்.  கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளாகவே திருவள்ளூரில் +2 மாணவி உயிரிழப்பு விவகாரம் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில், மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் அனைவரையும் பீதியில் உறைய வைத்துள்ளது.


மேலும் படிக்க | ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளி கல்வித்துறை! புதிய அதிரடி திட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ