கள்ளக்குறிச்சி விவகாரம்: கள்ளக்குறிச்சி பிளஸ் டூ மாணவி 2 சந்தேக மரண வழக்கு தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான குழுவினர் கடந்த 21 ஆம் தேதி சம்பவம் குறித்து முதல் கட்ட விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சியில் நடந்த இந்த விசாரணையில் அந்தப் பள்ளியில் நடைபெற்று வந்த விடுதியானது அனுமதி பெறாமல் முறைகேடாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. மேலும் பள்ளி விடுதி அனுமதி பெறாமல் முறைகேடாக செயல்பட்டு வந்ததை காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகிறதா?
இந்நிலையில் நாளை அதாவது ஜூலை 27 ஆம் தேதி 2022 கள்ளக்குறிச்சி செல்லும் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான குழு இரண்டாம் கட்ட விசாரணையை நடத்த உள்ளது குறிப்பாக முன்பு சொன்னது போல அனுமதி இல்லாமல் பள்ளி வளாகத்தில் விடுதி நடத்தி வந்ததை காவல்துறையின் முதல் தகவலை அறிக்கையில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். அதேபோல கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தவறான செய்திகளை வெளியிட்ட தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதும் வழக்கு பதியப்படுவதற்கான ஆலோசனையும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக தவறான அல்லது பொது அமைதியை குறைக்கும் விதமாக பதிவுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இதில் சமூக ஊடகங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் அது தொடர்பான தகவல்களை தங்களுக்கு அளித்து ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் டெலிகிராம் நிறுவனம் தங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் காவல்துறை தெரிவித்து இருக்கிறது.
18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எந்த வகையில் பாதிக்கப்பட்டாலும் செக்சன் 74 இன் படி அவர்களின் அடையாளங்களை எந்த வகையிலும் வெளியிட வேண்டாம் மேலும் குழந்தைகளின் முகத்தை மறைத்து தான் ஒளிபரப்ப வேண்டும் என்று வேண்டுகோள் வைத்ததுடன் கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரத்தின் போது அந்த மாணவியின் பெயரை குறிப்பிட்டு ஹாஷ்டேக் வெளியிட்டது கூட கவலை அளிப்பதாகவும் முன்னதாக ஆணையம் வருத்தமும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக வெளியான பகீர் தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ