கிறிஸ்துமஸ் , புத்தாண்டு முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக மது மற்றும் போதை பொருட்கள் கடத்தி செல்வதை தடுக்கும் வகையில் குமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லைகளில் சில நாட்களாக அவ்வப்போது தமிழக கேரளா போலீசார் இணைந்து வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இன்று படந்தாலுமூடு பகுதியில் கேரளா மதுவிலக்கு போலீசார் மற்றும் தமிழக காவல்துறை இணைந்து வாகன சோதனை மேற்கொள்ளும் போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் கேரள அரசு பேருந்தில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த நபரை பிடித்து அவரிடம் இருந்த பேக்கேஜ்களை சோதனை செய்த போது, அதில் கட்டு கட்டாக இரண்டாயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் கட்டுகள் இருப்பது தெரிய வந்தது. 


ALSO READ | காதலியை கொன்ற வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது


இதை அடுத்து, தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஆவணங்கள் இல்லாமல். இவை சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இவர் சென்னை புதுப்பேட்டை யை  சேர்ந்த ஆதம் 45 என்பதும்  தெரிய வந்தது. இவரது மொபைல் போனில் அமெரிக்கன் டாலர் உட்பட சட்ட விரோதமாக  வெளிநாட்டு பண பரிவர்த்தனை செய்த  சில ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்த போலீசார், இவரை  கைது செய்து கூடுதல் விசாரணைக்காக தமிழக போலீஸ்சார், கேரள மது விலக்கு போலீசார் ஒப்படைத்தனர். இவரிடம் களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ALSO READ | திருநங்கைகளுக்கு வீடு கட்ட ரூ.1.5 கோடி நிதியுதவி அளித்தார் அக்ஷய் குமார்...


ALSO READ | திருநங்கையாக மாறிய மகனை அடித்து கொலை செய்த தாய்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR