நாடு முழுவதும் ஒரே கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்க்கு கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:- மோடி தலமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே கல்வி கொள்கையை கொண்டு வருவது முறையல்ல, இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். காஷ்மீர் முதல் குமரி வரை ஒரே கொள்கை சாத்தியமல்ல. நாடு முழுவதும் ஒரே மாதிரி உடை , உணவு முறை என்று கட்டாயப்படுத்த முடியுமா ? இது போல் இந்த கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். 


தமிழ்மொழியை பின்னுக் தள்ளி சமஸ்கிருதத்திற்கு முக்கிய இடம் தர முயற்சி நடக்கிறது. சமத்துவத்திற்காக இந்த போராட்டம், சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர விண்ணப்பித்திருக்கிறோம். எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்க்க தயாரக இருக்கின்றோம். தனித்தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என கடிதம் வழங்கவிருக்கிறேன். 


மத்திய அரசு கைவிட மறுக்குமானால் மீண்டும் தமிழகத்தில் 1965 போன்ற ஒரு போராட்டம் ஏற்படுவதற்கான ஒரு நிலை உருவாகும் என மத்திய அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். என ஸ்டாலின் பேசினார்.