கொரோனா கிருமிப் பரவலானது உலகத்தையே புரட்டிப் போட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்திருக்கிறது. கொரோனாவின் தாக்கத்தால், கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான உதகை மலர்க் கண்காட்சியும் ரத்து செய்யப்பட்டிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வழக்கமாக ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெறும் உதகை மலர்க் கண்காட்சி மிகவும் பிரபலமானது. மலரைச் சுற்றி வண்டுகள் மொய்ப்பதுபோல, சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்தில் உதகை மலர்க் கண்காட்சியை கண்டு களிக்க ஊட்டியை வட்டமிடுவார்கள்.


Read Also | Cricketer ரவி சாஸ்திரியின் நிறைவேறாத காதல்


இந்த ஆண்டு மே மாதம் 15-ம் தேதி தொடங்கி 5 நாள்கள் மலர்க் கண்காட்சி நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு, அதற்கானபணிகள் பல மாதங்கள் முன்னதகவே தொடங்கிவிட்டன.  ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டிருப்பதால் உதகையின் 124-வது மலர்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.


இதற்கு முன்னதாக கடந்த 2000-ம் ஆண்டில் தேயிலைத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது, வேறு வழியில்லாம உதகை மலர்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. ஆனா அப்போது கூட மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகள் வரத்து இருந்தது.  அதிகாரப்பூர்வமாக மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை என்றாலும், பல மாதங்கள் முன்னதாக நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டிருந்த மலர் அலங்காரங்களை மக்கள் கண்டு ரசிக்கும் வாய்ப்பு இருந்தது.


Read Also | கணித மேதை 'சகுந்தலா தேவி' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும்


ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக உதகை தாவரவியல் பூங்கா வரலாற்றில் மக்கள் நடமாட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்பதால் பூத்துக் குலுங்கும் மலர்களையும், தோட்டக்கலைத் துறையின் மலர் அலங்காரங்களையும் யாரும் காணமுடியவில்லை.


ஆனால்  தொழில்நுட்ப வசதிகளால் மக்கள் வீட்டிலிருந்தே மலர்க் கண்காட்சியை கண்டு ரசிப்பதற்காக மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளால், பூங்கா முழுவதும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அவை மெய்நிகர் காட்சிகளாக அதாவது virtual flower showவாக உருவாக்கப்பட்டுள்ளது.  எனவே இந்த ஆண்டு உதகை தாவரவியல் பூங்காவின் மலர்க் கண்காட்சியை அனைவரும் வீடுகளில் இருந்தே கண்டு களிக்கலாம்.