OP Raveendranath: கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.  இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் குமார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளிவைக்கவில்லை என்று கூறியிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தேர்தல் வழக்கை ஏற்கக்கூடாது என ஓ.பி. ரவீந்திரநாத் குமாரின் நிராகரிப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு நடைபெற்ற விசாரணையின்போது, ஏற்கனவே மூன்று நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் குமார், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார். அவரை தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். 


மேலும் படிக்க | சபாநாயகராக இருந்த தனபாலை அவமதித்தது திமுக தான் - இபிஎஸ்


அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதிகுறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பாக சில விளக்கங்களை நீதிபதி கேட்டிருந்தார். அது தொடர்பாக ஆவணங்களை சமர்பிக்க தயாராக இருப்பதாக ரவீந்திரநாத் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, தன் தரப்பு விளக்கத்தை கேட்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.


அதை நீதிபதி ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், ரவீந்திரநாத்குமார் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தார். அப்போது அவர் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் தெரிவித்த கேள்விகளுக்கு, சாட்சி கூண்டில் ஏறி ஆங்கிலம் மற்றும் தமிழில் தனது வாக்குமூலத்தை அளித்தார். பின்னர் மனுதாரர் மிலானி தரப்பு வழக்கறிஞர் வி. அருண் நடத்திய குறுக்கு விசாரணைக்கும் பதிலளித்தார்.


அதிகார துஷ்பிரயோகம், ஆவணங்களில் திருத்தம், சொத்துகள் முறையாக காட்டாதது, பணப்பரிமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை மறுத்து மூன்றரை மணி நேரத்திற்கு மேலாக நின்றபடியே விளக்கம் அளித்தார். இதையடுத்து இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 30ஆம் தேதியன்று நடைபெற்ற நிலையில், இன்று (ஜூலை 6) இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பில், ஓ.பி. ரவீந்திரநாத் குமார் தேனி மக்களவை தொகுதியில் பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பு நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் தீர்ப்பளித்தார். 


இதனை தொடர்ந்து, ஓ.பி. ரவீந்திரநாத் குமாரின் கோரிக்கையை அடுத்து, மேல் முறையீடு செய்ய 29 நாள்கள் அவகாசம் அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், அதிமுக சார்பில் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் மட்டும் தான் வெற்றி பெற்றார். மேலும், இவர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ஆவார். இவர் தேர்தலில் வெற்றி பெற்றபோது, ஓ. பன்னீர் செல்வம் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ஆளுநர் நெனச்சா மந்திரி! இல்லன்னா எந்திரி : ஹெச்.ராஜா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ