93-வது பிறந்தநாளை கொண்டாடினார் - மு. கருணாநிதி
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று 93-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
சட்டமன்றத் துறை, நீதித் துறை ,நிர்வாகத் துறை மற்றும் பத்திரிகைகள் துறை என நான்கு தூண்களே மக்களாட்சி எனும் மணி மண்டபத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தத் தூண்கள் எத்தகைய தூய்மையான நோக்கத்தை தாங்கிப் பிடிப்பதற்காக உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கங்கள் இந்த நூற்றாண்டில் மிகப் பெரும் சோதனைக்குள்ளாகி சவால்களை எதிர்நோக்கி உள்ளன.
சோதனைகளில் வென்று பொன்னாக மிளிர வேண்டிய அந்தத் தூண்கள் தற்போது துருப்பிடிக்கத் தொடங்கிவிட்டன. அதற்குக் காரணம் நமது சமுதாய அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவி இருக்கும் மக்களாட்சிக்கு விரோதமான சக்திகளே காரணம். அவை இந்த சமுதாயத்தை உருக்குலைத்து வருகின்றன என்பது தான்.
இந்த எதிர்மறைப் பாதிப்பை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்தி மக்களாட்சியின் நான்கு தூண்களின் நல்ல ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், சமயச் சார்பற்ற ஜனநாயக சோஷலிசக்திகள் ஒன்றுதிரள வேண்டும். அதற்காக நமது நாட்டின் இளைஞர்கள் எத்தகைய தியாகத்தையும் செய்ய உறுதி மேற்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன் என கூறினார்.
இதைப்பற்றி @kalaignar89 என்ற டுவிட்டர் பக்கத்தில் கொடுக்கப்பட்டது:-