செல்லாத நோட்டு Vs கள்ள நோட்டு: ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர் வார்த்தை மோதல்
Tamil Nadu: ஓ பன்னீர்செல்வம் பற்றி பேச ராஜன் செல்லப்பாவுக்கு தகுதி இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தான் கள்ள நோட்டு - ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் பதிலடி.
ஓபிஎஸ் செல்லாத நோட்டு என்ற ராஜன் செல்லப்பா கருத்துக்கு, ஈபிஎஸ் ஒரு கள்ள நோட்டு என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பதிலளித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளரான கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்த போது, ஈபிஎஸ் ஆதரவாளர் ராஜன் செல்லப்பா "ஓபிஎஸ்" பற்றி "செல்லாத நோட்டு" எனத் தவறாக பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தான் "கள்ள நோட்டு" என பதிலடி தந்துள்ளார்.
செய்தியாளர்கள் மத்தியில் கோவை செல்வராஜ் பேசியது, "கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி வருகையின் போது எடப்பாடி பழனிச்சாமி மோடியுடன் ஆங்கிலத்தில் பேசியதை ஆர்.பி.உதயகுமார் மிகவும் பெரிதாக பேசுகின்றனர். ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் பேசியதை ஈபிஎஸ் பெரிய தலைவராக பேசுகின்றனர். நவம்பர் 11ஆம் தேதியுடன் தற்காலிக பொதுச் செயலாளரான இபிஎஸ் பதவி காலாவதி ஆகி உள்ளது. பொதுச் செயலாளர் பதவியும் மற்றும் இணைய ஒருங்கிணைப்பாளர் பதவியும் இரண்டும் காலாவதி ஆகி உள்ளது. தற்பொழுது அவர் எந்த பகுதியில் இல்லை. ராஜன் செல்லப்பா, ஓபிஎஸ் அவர்களைப் பற்றி செல்லாத நோட்டு என்று தவறாக பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தான் கள்ள நோட்டு.
மேலும் படிக்க: முதலில் இபிஎஸ், அடுத்தது ஓபிஎஸ் - பிரதமரின் திட்டம் என்ன?
நவம்பர் 21ஆம் தேதி வரக்கூடிய பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நீதி வெல்லும் என நம்பிக்கை உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் 69 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தினார். ஜெயலலிதாவின் முயற்சி காரணமாகவே பேரறிவாளன் உட்பட ஏழு பேருக்கு விடுதலை கிடைத்தது. 2024 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பாஜகவினர், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சிடம் தான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள். மீண்டும் மோடி தான் பிரதமராக வேண்டும் என்று நாங்கள் கூட்டணி வைப்போம்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த பொழுது அமைச்சர்கள் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்வதில் குறியாக இருந்தார்களே தவிர, ஜெயலலிதாவை உயர் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல யாரும் முயற்சி செய்யவில்லை. அப்போது பொறுப்பு முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் அனைவரிடமும் உயர் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்வோம் என கூறிய போது அதை யாரும் கேட்கவில்லை. இந்த விவகாரத்தில் சசிகலாவை பற்றி கூறுவதற்கு கருத்து ஏதுமில்லை" என கூறினார்.
மேலும் படிக்க: ‘ஒண்ணு சேருங்க இல்லை இங்க வராதிங்க’ - இபிஎஸ், ஓபிஎஸ்ஸை கண்டுகொள்ளாத டெல்லி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ