ஓபிஎஸ், இபிஎஸ் மோதல் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினரிடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்குமாறு இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதற்கு இடையே அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி அக்கட்சியின் உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கு 


முன்னதாக அவர்கள் தொடர்ந்த வழக்கில், அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது என கூறப்பட்டுள்ளது. மேலும், பொதுச் செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அதிமுக உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும்,  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க கோரி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுவை தாக்கல் செய்தனர்.


மேலும் படிக்க | படத்தில் ஒளிந்துள்ள பாம்பு உங்கள் கழுகு பார்வைக்கு தெரிகிறதா


மனுவில் குறிப்பிடப்பட்டவை 


அதில், கட்சி விதிகள்படி நிர்வாகரீதியாக பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களான பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டுதல், கட்சி ஆட்சிமன்ற குழு அமைத்தல் மற்றும் உட்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்றவற்றை அதிமுக கட்சி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்த தடை விதிக்கக் கோரப்பட்டுள்ளது.


மேலும், கட்சி விதிகளில்  திருத்தம் கொண்டு வர தடை விதிக்க வேண்டும் எனவும், செயற்குழுவால் நியமிக்கப்பட்ட தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பதவியில் நீடிக்க தடை விதிக்கவும், கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதியதாக கட்சி  பதவிகளில் நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த இடைக்கால மனுக்களில் கோரிக்கை வைத்துள்ளனர்.


நீதிமன்றம் உத்தரவு  


இந்நிலையில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு  மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி இந்த கூடுதல் மனுக்களை நாளை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாளை விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.


மேலும் படிக்க | தாகத்தால் தவித்த ராஜ நாகம்; தண்ணீர் வழங்கிய கொடை வள்ளல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR