சட்டசபையில் 3.15 மணிநேரம் பட்ஜெட் உரையாற்றிய ஓபிஎஸ்
தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் 3.15 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றினார்.
தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் 3.15 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றினார்.
தமிழகத்தின் 2020 - 21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையைத் தொடங்கினார்.
இன்றைய பட்ஜெட் உரையை காலை மணி வாக்கில் ஆரம்பித்த பன்னீர்செல்வம், 196 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார். பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி, புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இதற்கிடையில் 196 நிமிடங்களுக்கு நீண்ட பட்ஜெட் உரையைப் பற்றி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திமுக கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், “196 நிமிடம் நிதிநிலை அறிக்கையைப் படித்திருக்கிறார் ஓபிஎஸ். 159 நிமிடங்கள் மத்திய பட்ஜெட்டை வாசித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இது எப்படி அதிமுக அரசு, மத்திய அரசைப் பின்பற்றுகிறது என்பதற்கான உதாரணம்,” என்று கிண்டல் செய்தார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.