மதுரை: புதன்கிழமை தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ராமச்சந்திரன், ஜே.ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளைப் பின்பற்றி தற்போதைய அதிமுக அரசு செயல்பட்டு வருவதாகக் கூறினார். அவர்களது காலடிகளை பின்பற்றி தங்களது அரசு மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நலிந்தவர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்காக அரசு அயராது பல நலத்திட்டங்களை தீட்டி வருவதாகவும் அவர் கூறினார். தமிழகம் போல விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டு சலுகைள் ஆகியவை வேறு எந்த மாநிலத்திலும் நீட்டிக்கப்படவில்லை என்று முதல்வர் மேலும் கூறினார்.


தமிழ்நாட்டின் அதிமுக அரசு ஏழைகளின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு அவர்களின் நலனுக்காக எப்போதும் செயல்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி (Edappadi K Palaniswami) தெரிவித்தார்.


தன்னைப் பற்றி குறிப்பிடுகையில், ஒரு விவசாயி தமிழ்நாட்டில் அரசாங்கத்தின் தலைமையில் இருப்பதாகவும், நல்லாட்சியை வழங்குவதாகவும் பழனிசாமி கூறினார். “விவசாயிகள் மற்றும் சாமானியர்களின் தேவைகளை அரசாங்கம் உணர்ந்துள்ளதால், நீர்நிலைகளில் அதிகபட்சமாக தண்ணீர் சேமிக்கப்படுவதை உறுதி செய்யும் குடிமராமத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது” என்றார் முதல்வர்.


ALSO READ: Tamil Nadu Election 2021: AIADMK கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இப்படி இருக்குமா?


தனது அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பல்வேறு மக்கள் நல மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை பட்டியலிட்டு அவை எவ்வாறு மக்களை சென்றடைந்துள்ளன என்பதை விளக்கிய தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினால் (MK Stalin), அதிமுக அரசாங்கத்தின் முன்னேற்றத்தை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றார்.


ஸ்டாலினின் தற்போதைய பிரச்சாரத்தை விமர்சித்து, பழனிசாமி, தேர்தல் பேரணிக்கு எங்கு சென்றாலும் பெட்டிகள் வைக்கப்பட்டதாகவும், திமுக தலைவர் எவ்வாறு 100 நாட்களில் மக்களின் குறைகளை தீர்க்க முடியும் என்றும், இந்த உறுதிகள் மக்களை ஏமாற்றவே என்றும் கூறினார்.


இப்போது, ​​தற்போதைய அரசாங்கம் (TN Government) அண்மையில் 1100 ஹெல்ப்லைனை அறிமுகப்படுத்தி குறை தீர்க்கும் வழிமுறையை எளிதாக்கியுள்ளது. குறுகிய காலத்தில், 55,000 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இது தவிர ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கான நலத்திட்டங்களைப் பற்றி அறிவித்த முதல்வர் அங்கு விரைவில் ஆறு மினி கிளினிக்குகள் உருவாக்கப்படும் என்றார்.


ALSO READ: Tamil Nadu: எண்ணெய், எரிவாயு துறையின் பல செயல்திட்டங்களை துவக்கி வைக்கிறார் பிரதமர்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR