பெட்ரோல் செஞ்சுரி அடிக்கப்போகிறது; டீசல் விலை அதை பின் தொடர்கிறது: MKS

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வு, மத்திய அரசு மக்களுக்கு கொடுத்த கொடூரப் பரிசு என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 16, 2021, 07:14 AM IST
பெட்ரோல் செஞ்சுரி அடிக்கப்போகிறது; டீசல் விலை அதை பின் தொடர்கிறது: MKS title=

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வு, மத்திய அரசு மக்களுக்கு கொடுத்த கொடூரப் பரிசு என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG Gas cylinder) விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த 4ஆம் தேதி 25 ரூபாய் சமையல் கேஸ் சிலிண்டர் (LPG Gas) விலை உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் 50 உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது ஒரு சிலிண்டர் ரூ.785 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரே மாதத்தில் சிலிண்டரின் விலை 75 ரூபாய் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அவர்கள், சட்டப் பேரவை தேர்தலைக் கருத்தில் வைத்து, பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். மதுரை “AIIMS” மருத்துவமனையின் நிலை என்னவென்று அறிந்த தமிழக மக்கள், பிரதமரின் புதிய அறிவிப்புகளின் தன்மையையும், தரத்தையும் நன்கு அறிவார்கள். அவர் வாயால் அறிவிக்கப்படாத ‘பரிசாக’ கேஸ் சிலிண்டர் விலை (LPG price hike) மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

ALSO READ | Tamil Nadu Election 2021: AIADMK கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இப்படி இருக்குமா?

பொதுமக்கள் பயன்படுத்தும் மானியத்துடனான சமையல் கேஸ் சிலிண்டருக்கு கொரோனா (Coronavirus) காலத்தில் ஒரே மாதத்தில் 100 ரூபாய் விலை உயர்த்தி, வதை படு படலத்தைத் தொடங்கிய BJP தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தற்போது மானியமில்லாத சிலிண்டர் விலையையும் ரூ.50 உயர்த்தி தேநீர்க்கடை, சிறு உணவகம் போன்ற எளிய மக்களின் வணிகத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இந்த விலை உயர்வுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சர்வதேசச் சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலருக்கு மேல் விற்பனையானபோது, ரூ.450 முதல் ரூ.500-க்குள்ளான விலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விற்கப்பட்டது. அதற்கே BJP-யினர் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும், அதை வேண்டுமென்றே கணக்கில் கொள்ளாமல், பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய BJP அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் (Petrol Diesel Price Hike), சமையல் கேஸ் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது. தற்போது 750 ரூபாய்க்கும் அதிகமாகச் சமையல் கேஸ் சிலிண்டருக்கு விலை கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு மக்களைத் தள்ளியுள்ளது பா.ஜ.க. அரசு.

பெட்ரோல் விலை ‘செஞ்சுரி’ அடிக்கப்போகிறது. டீசல் விலை அதனைப் பின் தொடர்கிறது. சமையல் கேஸ் விலை விண்ணைத் தொடுகிறது. இந்திய மக்களுக்கு, பிரதமரும் அவரது அமைச்சரவையும் தருகின்ற கொடுமையான பரிசுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மக்களுக்கு இத்தகைய பரிசுகள் தேவையில்லை. அவர்கள் நிம்மதியாக வாழும் வகையில், வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தைக் கைவிட வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News