ஆன்லைன் தேர்வு நடத்த கோரி போராட்டம் நடத்திய 700 மாணவர்கள் மீது வழக்கு!
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அரசு பொதுமுடக்கத்தை அறிவித்தது. இதன் காரணமாக பல நிறுவனங்கள் முடங்கிய நிலையில், கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.
மதுரை: கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அரசு பொதுமுடக்கத்தை அறிவித்தது. இதன் காரணமாக பல நிறுவனங்கள் முடங்கிய நிலையில், கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. பள்ளி ,கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் கற்றலில் பாதிப்பு ஏற்படும் என்பதால் அரசு ஆன்லைன் மூலமாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் மாணவர்களுக்கு கற்றல் இடைநிற்றலை தவிர்க்க அரசு வழிவகை செய்தது. அதன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது .
அதனையடுத்து தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் நடத்தப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியதை அடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு, இந்த கல்வியாண்டில் பாதியில் கல்வி நிறுவனங்கள் செயல்பட தொடங்கி உயர் வகுப்பு முதல் கொஞ்சம் கொஞ்சமாக வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. வகுப்புகள் செயல்பட தொடங்கியதையடுத்து இனி வரும் தேர்வுகள் நேரடியாகவே தேர்வு மையங்களில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது .
இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் பாடங்களை நடத்திவிட்டு ,தேர்வை மட்டும் ஆஃப்லைனில் வைக்கக்கூடாது, என்று மதுரையில் நூற்றுக்கணக்கான ஆண் ,பெண் என இருபாலின மாணவர்களும் போராட்டம் நடத்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்நிலையில் நேற்று நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரி ,திருமலை நாயக்கர் கல்லூரி ,சௌராஷ்டிரா கல்லூரி என மொத்தமாக 700 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ALSO READ கோவை தற்கொலை: மாணவி அடையாளங்களை வெளியிட்ட 48 வலைதளங்கள் மீது POCSO பாய்ந்தது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR