ராஜராஜசோழன் குறித்த சர்ச்சை பேச்சுக்காக  இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் (Pa. Ranjith) உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 


‘2019 ஜூன் 5 ஆம் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக, பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று குறித்த உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன்.  நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் "செந்தமிழ் நாட்டு சேரிகள்" எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசினேன்.


பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகளும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கற்காலம் என குறிப்பிட்டுள்ளனர். தேவதாசி முறை அவரது ஆட்சிக் காலத்தில் அதிகளவில் இருந்துள்ளது.


ALSO READ:எல்லா பேரிடரிலும் ஒன்றாய் நிற்கிறோம்; சாதிப்பேரிடரில் மட்டும் தனித்தனியாய் நிற்கிறோம்: பா.ரஞ்சித் 


பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன். இந்த தகவலை வேறு பலரும் பேசி உள்ளனர். ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் (Social Media) தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. மேலும் எனது கருத்து எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை.   ஆகவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என பா. ரஞ்சித் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.  


இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், பா.ரஞ்சித் மீதான வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.


இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


முன்னதாக, கடந்த 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், "மன்னர் ராஜராஜ சோழன் தான் தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருந்த நிலத்தை அபகரித்தார். அவரது ஆட்சியிலிருந்து தான் ஜாதி கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. ராஜராஜ சோழன் (Rajaraja Cholan) ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி" என்றெல்லாம் பேசியிருந்தார்.


இவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. அவரின் பேசுக்கு எதிராகவும், ஆதராகவும் சமூக வலைதளத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இதனையடுத்து இயக்குநர் பா. ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீசார் கலகம் உண்டாக்குதல், ஜாதி மோதலை உருவாக்குதல் என்ற 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ:ராஜராஜசோழன் பற்றி அவதூறு பேசியதாக வழக்குப்பதிவு!! இயக்குநர் பா.ரஞ்சித் கைதாகிறாரா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR