Thaipusam 2022: பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்தடன் தொடங்கியது
ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா தொடங்கியது! கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் இன்றி பூஜைகள் நடைபெற்றன
பழனி: ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா தொடங்கியது! கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் இன்றி பூஜைகள் நடைபெற்றன
கொரோனா காலம் என்பதால் பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தர்கள் இன்றி கொடியேற்றத்தடன் 10 நாள் திருவிழா தொடங்கியது.
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான தரிசனம் செய்து வருவார்கள்.
தற்போது 12.1.22 இன்று புதன்கிழமை பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா (Palani Thaipusam Festival) துவங்கியது.
ALSO READ | தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவில் தேர்த் திருவிழா
அதிகரித்து வரும் கொரோனா பரவலால், தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் 10 நாட்கள் நடைபெறும் தைப்பூச விழாவில் மண்டகப்படிதாரர்களுக்கு அனுமதி இல்லை.
ஆகம விதிகளின்படி அனைத்து நிகழ்வுகளும், சடங்குகளுடன் தைப்பூசா விழா நடைபெறும் என்றும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கொடியேற்றம் மற்றும் 17.ம் தேதி வெள்ளி தேரோட்டம் என லட்சக்கணக்கில் பக்தர்கள் வழக்கமாக கூடும் நிலையில், இந்த ஆண்டு ஆலயப் பணியாளர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வார்கள்.
18ஆம் தேதி நடைபெற உள்ள தைப்பூசத் தேரோட்டத்திற்கு (Palani Thaipusam Festival) பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், பூஜைக்கு ஏற்பாடு செய்யும் ஆலய பணியாளர்கள் மட்டுமே நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வார்கள் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தற்போது கொரோனா நோய் பரவல் அதிகரிப்பின் காரணமாக 14ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை தமிழகம முழுவதும் உள்ள ஆலயங்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்து நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்கு பக்தர்கள் இல்லாமல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தைப்பூசத் திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் www.palanimurugan.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் வலைதளத்தின் மூலமாகவும், நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் தைப்பூசத் திருவிழாவை பார்த்து இறைவனை தரிசிக்கலாம் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ALSO READ | Omicron அறிகுறி இருந்தால் இவற்றை உட்கொள்ளுங்கள்: அதிக பலன் கிடைக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR