வேலூரில் பாலாற்றை வழிபாடு செய்யவும், அதனை பாதுகாத்திடவும் பாலாறு பெருவிழா நடைபெற உள்ளது. அதையொட்டி, ஐந்து நாட்கள் மாநாடும் நடைபெறவுள்ளது. அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் இந்த மாநாடு நடக்கவுள்ளது. இந்த பாலாறு  விழாவில், தமிழக முதல்வர், பாண்டிச்சேரி முதல்வர், ஆளுநர் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 29 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 3ம் தேதி வரையில் உள்ள ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக பாலாறு பெருவிழா நடக்கிறது. இதில் அகில பாரத அளவில் உள்ள துறவியர்கள் பங்கேற்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பாலாற்றில் நூதன கோரிக்கை - ரூ.10,000 அபராதம் விதித்து தள்ளுபடி செய்த செ. உயர்நீதிமன்றம்


முதல் நாள் நிகழ்வினை ஆளுநர் துவங்கி வைத்து, தமிழக முதல்வர் பங்கேற்கவுள்ளார். முதல் நாள் அன்று, சன்னியாசிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது.


இரண்டாவது நாள் துறவியர்கள், ஆதினங்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. இரண்டு நாட்களும் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அமைச்சர் சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். 


மூன்றாவது நாள் பெண் துறவியர்கள் மாநாடும், 4 ஆவது நாள் பசுக்கள் பூமி பாதுகாப்பு மாநாடும் நடைபெற உள்ளது. 
ஐந்தாவது நாள் கிராம கோவில் பூசாரிகள் மாநாடு நடக்கிறது. ஐந்துவிதமான மாநாடுகளில் அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்கின்றனர். 


கோரிக்கைகள்


இந்தப் பெருவிழாவில் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட உள்ளன. அதனை சேலத்தைச் சேர்ந்த சுவாமி ஆன்மானந்த சரஸ்வதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன் சுருக்கம் கீழே.


1. பாலாற்றில் தோல் கழிவுகளை கலக்கக் கூடாது என்பதே எங்களின் நோக்கம் 


2. பாலாறு பாதுகாக்கவும் குப்பையை கொட்டாமல் இருக்கவும் இந்த பெருவிழா மாநாடு 


3. பக்தர்கள் ஆரத்தி மட்டும் எடுக்கவும்,  நீராடவும் அனுமதியில்லை. ஆனால் தீர்த்தம் எடுத்து தெளித்துக்கொள்ளலாம்.


4. பாலாற்று படித்துரைகளை அரசாங்கம் செப்பனிட வேண்டும்


மேலும் படிக்க | மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்ட கர்நாடக அரசு!


5. கழிவுகளை நதிகளில் கலக்க கூடாது என்பதை இந்த மாநாட்டில் தீர்மானமாக கொண்டு வரவுள்ளோம் 


6. மாநகராட்சி குப்பைகளை பாலாற்றில் கொட்டுவதை தடுக்க வேண்டும்


7. பாலாற்றை ஒட்டியுள்ள நீர் நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் 


8. உயர்நீதிமன்ற தீர்மானத்தின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு அகற்ற வேண்டும்


9. அனைத்து நதிகளையும் இணைத்து நதிகளை தேசியமயமாக்க வேண்டும் 


10. நீர்வழிப் பாதையில் நதிகளை இணைத்தால் அனைத்து பகுதிகளுக்கும் நீர் கிடைக்கும் என்பதால் தமிழகத்தில் உள்ள எல்லா நதிகளையும் இணைக்க வேண்டும் 


இந்த மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துறவிகள் பங்கேற்க உள்ளதாகவும், கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் துறவி ஆத்மானந்த சரஸ்வதி தெரிவித்துள்ளார். மேலும், மதங்களை கடந்து அனைவருக்கும் தண்ணீர் பொதுவானது என்பதால் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். 


மேலும் படிக்க | கட்ட விட மாட்டோம்.! - தமிழ்நாடு ; கட்டியே தீருவோம்! - கர்நாடகா


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR