கோயிலுக்குள் பட்டியலின தம்பதிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை..!
பள்ளிபாளையம் அருகே பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த புதுமண தம்பதியினரை கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை பகுதியில் இந்து அறநிலையத்துறையின் கீழ் பிரம்மலிங்கேஸ்வர் கோயில் உள்ளது.இந்த கோவிலில் பட்டியலினத்தை சேர்ந்த காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பழனியப்பன் என்ற கோவில் நிர்வாகி தம்பதியை கோவில் உள்ளே செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியதால் இந்து அறநிலையத்துறையின் ஆய்வாளர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பள்ளிபாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் தம்பதியினரிடம் வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பழனியப்பன் தடுத்து நிறுத்தியாக வாக்குமூலம் அளித்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்திய வருவாய் துறையினர் விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து தம்பதியினரை அனுப்பி வைத்தனர். இதன் பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தம்பதியினர், கோயிலுக்குள் அனுமதி மறுத்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும் படிக்க | 100க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் ; கைதேர்ந்த கொள்ளையனின் பகீர் பின்னணி..!
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் கோவில் நுழைவு போராட்டம் நடத்தப் போவதாக ஆதி தமிழர் பேரவை அமைப்பினர் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | உருவ கேலி செய்ததால் ஆத்திரம்! நண்பனை கொன்று வெறிச்செயலில் ஈடுபட்ட மாணவன்.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR