பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் பங்குனி திருவிழா தொடங்கியது!
பிரசிதிபெற்ற பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் பங்குனி திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வரும் 20-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
பிரசிதிபெற்ற பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் பங்குனி திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வரும் 20-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
நாகர்கோவில் அருகே பறக்கையில் குமரியின் குருவாயூர் என அழைக்கப்படும் புகழ்பெற்ற மதுசூதன பெருமாள் கோவில் உள்ளது. தங்க கொடிமரம் உடைய கோவிலான இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 20-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த விழாவின் முதல் நாளான இன்று அதிகாலையில் கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு கொடியேற்றம் போன்றவை நடைப்பெற்றது. மாத்தூர்மடம் தந்திரி சங்கரநாராயணரு கொடியேற்றி விழாவின் முதல் நாளை துவங்கி வைக்கின்றார்.
திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, பக்தி பஜனை, இன்னிசை கச்சேரி, தோல் பாவை கூத்து, ஆன்மிக சொற்பொழிவு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்நவது வரும் 19-ஆம் நாள் காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். இதில் சாமி தேர், பிள்ளையார் தேர் என இரண்டு தேர்கள் உலா வருகின்றன. மதியம் 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம், 9.30 மணிக்கு சாமி வெள்ளி கருட வாகனத்தில் வேட்டைக்கு எழுந்தருளல் நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 20-ஆம் நாள் பிற்பகல் 3 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் ஆறாட்டு துறைக்கு சாமி எழுந்தருளலும், இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், மதுசூதன பெருமாள் சேவா சங்கத்தினரும் இணைந்து செய்துள்ளனர்.