வட்டாட்சியரை சிறைபிடித்த கிராம மக்கள்! காவல்துறை செய்த அதிரடி நடவடிக்கை!
சென்னையின் இரண்டாவது விமான நிலையமானது காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் பகுதியில் அமையப்படவிருப்பதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு சென்ற வட்டாட்சியர் சிறைபிடிப்பு விவகாரம் தொடர்பாக 10 பேர் மீதும் பிணையில் வெளியே வர முடியாத ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 10-பேரையும் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. சென்னையின் இரண்டாவது விமான நிலையமானது காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் பகுதியில் அமையப்படவிருப்பதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்த நாள் முதலே இத்திட்டத்தினால் பாதிப்படையும் கூடிய ஏகனாபுரம் உட்பட 13 கிராம மக்கள் பல்வேறு வகைகளிலே போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ச்சியாக மாலை நேரங்களில் 636 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலையும் புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்து ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருந்தனர். ஆனால் வாக்கப்பதிவு நாளன்று கிராமத்தில் வசிக்கக்கூடிய அரசு ஊழியர்கள் அந்தந்த துறை அதிகாரிகள் மூலம் நிர்பந்தப்படுத்தப்பட்டு வாக்களித்தாக கூறப்படுகிறது. குறிப்பாக 21 வாக்குகளே பதிவானதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி வாக்குப்பதிவு நாளன்று, கிராம நிர்வாக உதவியாளரின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரை வாக்களிக்க வலியுறுத்தியதாக கிராம மக்களுக்கு தகவல் வந்த நிலையில் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தியை கிராமத்தினர் சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அரசு ஊழியர்களை நிர்பந்தப்படுத்தியது தவறில்லை, ஆனால் அவர்களின் குடும்பத்தினரை நிர்பந்தப்படுத்துவது எவ்வகையில் நியாயம் எனவும் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வட்டாட்சியரின் காரை சிறைபிடித்தனர். இதனை அடுத்து வட்டாட்சியர் வாகனத்தை விட்டு விட்டு வெளியேறினார். இதனை எடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வட்டாட்சியரின் காரை விடுவித்து வட்டாட்சியரை வாகனத்தில் அனுப்பி வைத்தனர். அதற்கு முன்பாக அம்பேத்கர் சிலை அருகே ஏகனாபுரம் கிராம மக்களை வட்டாட்சியர் ஜாதி பெயரை சொல்லி (பரையர்களுக்கே இவ்வளவு இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும் நான் யார் என காட்டுகிறேன் என) திட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வட்டாச்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும், அவரது வாகனத்தை சிறைபிடித்தது தொடர்பாக ஏகானாபுரத்தை சேர்ந்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர்களான சுப்பிரமணி, கதிரேசன், இளங்கோ உள்ளிட்ட 10 பேர் மீது பிணையில் வெளியே வர முடியாத அளவிற்கு IPC ACT 147,294(b),332,341,353 ஆகிய 5பிரிவுகளின் கீழ் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பத்து பேரும் இன்று காவல் நிலையத்தில் ஆஜராகவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தனித்தனியே சம்மனும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே அம்பேத்கர் சிலை அருகே ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த மக்களை ஜாதி பெயரை சொல்லி வட்டாச்சியர் திட்டியதாக அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பில் சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரில் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்.. தமிழக கேரள எல்லைகளில் சோதனை தீவிரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ