சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் ’எண்ணித் துணிக’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கலந்துரையாடினார். 600க்கும் அதிகமான மார்க்குகளை பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர் மட்டும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனர். அரசுப் பள்ளி படித்த மாணவர்களில் அதிகபட்சமாக 569 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்கப்பட்டிருந்ததால் அவர்கள் யாரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உயர் கல்வி படிக்க செல்லும் தமிழக மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


கலந்துரையாடலின்போது சேலத்தைச் சேர்ந்த மாணவியின் பெற்றோர் ஒருவர், " தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு என்பது மிகச் சிறப்பாக இருக்கிறது. நீட் தேர்வு இல்லாதபோதே மாணவர்கள் சிறப்பாக படித்து மருத்துவர் ஆனார்கள் என்பதால், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். எனவே, தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அவரின் இந்த கேள்விக்கு பதில் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, " நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் கையெழுத்து இடமாட்டேன். இந்த விவகாரம் பொதுப்பட்டியலில் இருப்பதால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


பயிற்சி மையங்களுக்கு சென்று தான் நீட் தேர்வுக்கு படிக்க வேண்டிய அவசியமில்லை. பள்ளியில் படிக்கும்போதே கவனித்து படித்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம். நீட் தேர்வு நடைமுறைக்கு வரும் முன்பு மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகவே இருந்தது. நூற்றுக்கும் குறைவான மாணவர்களே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவப் படிப்பை படித்துள்ளனர். ஆனால், நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபின்புதான், அதிகளவில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற்றுள்ளனர்" என்று பதிலளித்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த பெற்றோர் அம்மாசியப்பன் ராமசாமி, " நீட் தேர்வுக்கு பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே செலவு செய்து நீட் கோச்சிங் அனுப்பி அந்த தேர்வில் மாணவர்களை வெற்றி பெற வைக்க முடிகிறது. ஏழை எளியவர்களால் அப்படி படிக்க வைக்க முடியாத நிலையே இருகிறது. தமிழ்நாடு அரசு மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. என் மகள் நீட் தேர்வில் வெற்றி பெறாததால், விரக்தியில் இந்த தேர்வில் விலக்கு வேண்டும் என கேட்கவில்லை. வெற்றி பெற்று வந்த மருத்துவப் படிப்புக்கான சீட் வாங்கிவிட்டோம். அதன்பிறகு தான் கேட்கிறேன் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்"  என்று கூறினார்.


மேலும் படிக்க | மக்களுக்கு இன்ப அதிர்ச்சி: சரசரவென சரிந்தது தக்காளியின் விலை! ஒரு கிலோ இவ்வளவு கம்மியா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ