தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  தமிழகம், புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை இதுவரை 27 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. 


தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை குறைந்துள்ளது. 2 நாட்களுக்கு பிறகு தான் மீண்டும் அப்பகுதிகளில் மழை தொடங்கும். சென்னையை பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


இதுகுறித்து வானலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வானத்தின் நிலை பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கக்கூடும், மேலும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை நகரத்தில் முறையே 34 மற்றும் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவித்துள்ளனர். 


TN வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள FB பதிவில், “லோன் வாரியர் சென்னையின் மேற்கில் காணப்பட்டார். நகரத்தின் சில பகுதிகளில் விரைவில் லேசான மழை பெய்ய வேண்டும். நகரின் சில பகுதிகளில் மட்டுமே மழை பெய்யும் என்பதை நினைவில் கொள்க. கடந்த வாரம் போன்ற பரவலான மழை இல்லை. ”



ஜூன் 1 முதல் ஜூலை 27 வரை சுமார் 247.5 மில்லிமீட்டர் மழையைப் பதிவு செய்துள்ளது. சென்னையில் ஜூன் 1 முதல் இயல்பை விட 56% ஆக பதிவாகியுள்ளது. மேலும், வடக்கு தமிழகத்தில் சமீபத்திய நாட்களில் நல்ல மழை பெய்தாலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகள் மழை பற்றாக்குறையாகவே இருந்தன. தென்மேற்கு பருவமழையின் போது கோவை மாவட்டம் 73% குறைவான மழை பதிவாகியுள்ளது. நமக்கல் மாவட்டத்தில் 77% ஆக பதிவுவாகியுள்ளது.