கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பொம்மதாத்தனூர் கிராமத்தில் இருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 2015 ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்பு, துவக்கப்பள்ளி அதே இடத்திலும் உயர்நிலைப்பள்ளி கிராமத்திற்கு அருகே குறிப்பிட்ட தொலைவில் ஒரு கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அமைக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் இபிஎஸ் அவர்களால் இந்த பள்ளி திறந்து வைக்கப்பட்டது. அன்று முதல் பள்ளிகள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பள்ளியில் அணுசோனை, ஜெக்கேரி, ஒன்னுகுறிக்கி, இருதாளம், காலேப்பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த 300 ஏழை எளிய மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிக்கூடம் கட்டியபோது  சமையல் செய்வதற்கென தனித்தனியாக சமையற் கூடம் கட்டாததால், பள்ளிக்கு பின்புறமாக கழிவறைக்கு என பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிட உட்பகுதியை மாற்றியமைத்து இட நெறுக்கடியில் முன்புறமாக ஷீட் அமைத்தும் செப்டிக் கழிவுநீர் தொட்டி அருகிலேயே மாணவர்களுக்கு சமையல் செய்யும் அவலநிலை தொடர்கிறது.



மேலும் படிக்க | ரீல்ஸ் மோகத்தில் சிறுவனின் விபரீத விளையாட்டு: போலீசிடமே கைவரிசை 


சமைத்த கையோடு சமையல் பணி உதவியாளர்கள் சூடான சத்துணவை சும்பாடு வைத்து தலைமீது சுமந்து சென்று எடுத்துச் சென்று மாணவர்களுக்கு பரிமாறுகிறார்ஜள்.



இது குறித்து பலமுறை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆசிரியர்கள்  முறையிட்டும் 3 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கழிவறையிலேயே சத்துணவு சமைக்கும் நிலை தொடர்கிறது.



இல்லம் தேடி கல்வி என்கிற திட்டம் கொண்டுவரப்பட்ட நம் நாட்டில் தான், பள்ளிக்கூடங்களுக்கு சமையல் கூடம் இல்லாமல் கழிவறையில் சமைக்கும் நிலையும் தொடர்கிறது என்பது வேதனையை அளிக்கின்றது.


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி விவகாரம் - மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ