11-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு முறை தொடரும் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

11-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு முறை தொடரும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

Written by - Chithira Rekha | Last Updated : Aug 15, 2022, 03:15 PM IST
  • 11-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு முறை தொடரும்
  • அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
  • 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்ற தகவலுக்கு மறுப்பு
 11-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு முறை தொடரும் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் title=

சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் உள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க மாநிலத் தலைமை அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேசியக் கொடி ஏற்றினார். இதனைத் தொடர்ந்து அவர் சாரண, சாரணியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ், சிக்கனமாக, ஒழுக்கமாக, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு சாரண, சாரணியர்கள் ஓர் உதாரணம் எனவும், நிலவுக்குச் சென்றவர்களில் 11 பேர் சாரண, சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்  எனவும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | சேதமடைந்த சான்றிதழ்களை திருப்பி வழங்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஸ்

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படும் என வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், இதனை மறுத்த அவர், 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும் எனவும், அதில் குழப்பம் வேண்டாம் எனவும் பதிலளித்தார். 

11ஆம் வகுப்பில் பாடங்கள் முறையாக நடத்தப்படவில்லை என்ற காரணத்தால்தான் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறையே கொண்டு வரப்பட்டது எனவும், எனவே, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் உறுதியளித்தார்.

மேலும் படிக்க | அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News