திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்  ரூ.250, ரூ.20 கட்டண தரிசனம் இன்று முதல் ரத்து செய்யப்பட்டு, ரூ.100 கட்டண வரிசை மற்றும் பொது தரிசன வரிசையில் மட்டுமே பக்தர்கள் இன்று முதல் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.  அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருவிழா காலங்களில் தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலில் ரூ.250.ரூ.100 ரூ.20 மற்றும் பொது தரிசனங்களில் பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | போலீஸ் பாதுகாப்பு கேட்கும் அமைச்சர் மகள் : காரணம் என்ன?!


பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வதால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதில் கோவில் நிர்வாகத்தினர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதால், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அறநிலையத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் இன்று முதல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 250 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனம், 20 ரூ கட்டண தரிசனம் ரத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.



100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும்  பொது தரிசனங்களில் மட்டுமே  பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் இரண்டு தரிசன வரிசையில் செல்லும் பக்தர்கள் மகா மண்டபத்தில் ஒரே வரிசையில் சென்று  தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் கைங்கரியம் செய்யும் திரிசுதந்திரர்களை கட்டுப்படுத்தும் விதமாக அர்ச்சகர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் முறையை  ஒழுங்குபடுத்த 120  ஆயுதப்படை காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.


மேலும் படிக்க | இனி குடும்ப தலைவிகளின் பெயரில்தான் வீடுகள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR