இனி குடும்பத் தலைவிகளின் பெயரில்தான் வீடுகள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறையின் சார்பில் வழங்கப்படும் வீடுகள் இனி குடும்ப தலைவிகளின் பெயரில்தான் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   

Written by - Gowtham Natarajan | Edited by - RK Spark | Last Updated : Mar 9, 2022, 09:58 AM IST
  • இனி குடும்ப தலைவிகளின் பெயரில்தான் வழங்கப்படும்
  • திமுக மகளிர் தின விழாவில் முதலமைச்சர் பேச்சு
  • ’பெண்கள் முகத்தில் வரும் மகிழ்ச்சி தான் என்னுடைய மகிழ்ச்சி’
இனி குடும்பத் தலைவிகளின் பெயரில்தான் வீடுகள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! title=

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக மகளிர் அணி சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தமிழக முதலமைச்சர் தலைமையில் மகளிர் தின விழா நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், அமைச்சர் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், கூட்டணிக் கட்சிகளில் உள்ள மகளிர் அணி தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவை பொறுத்தவரை மார்ச் 8 தான் மகளிர் தினம். ஆனால், நமக்கு 4ஆம் தேதியே மகளிர் தினம் வந்துவிட்டது என்றார். 

மேலும் படிக்க | "ஆபாசமாக பேசுவது ஆபத்தானது" - பப்ஜி மதனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

உள்ளாட்சியில் 60 சதவீதம் பெண்கள் பொறுப்பேற்று கொண்டதை மேற்கொள் காட்டி பேசியவர், திமுக ஆட்சியில் பெண்களுக்கு 21 மேயரில் 11 இடங்களும், நகராட்சி பேரூராட்சியில் 649 இடங்களும் வழங்கப்பட்டது பெருமையாக இருப்பதாக தெரிவித்தார். மார்ச் 8 என்பது மகளிர்க்கு மட்டும் முக்கியமான நாள் இல்லை, மனித குலத்திற்கு முக்கியமான நாள் என தெரிவித்தவர், தற்போது 61% பெண்கள் இலவச பேருந்தில் செல்கிறார்கள். இத்திட்டத்தால் 35 லட்சம் பேர் நாள் ஒன்றுக்கு பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.  

இந்த பயணத்தின் போது பெண்கள் முகத்தில் வரும் மகிழ்ச்சி தான் என்னுடைய மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசியவர், எத்தனையோ மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தாலும் தற்போது முதல் முறையாக முதலமைச்சராக, இந்த மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறேன் என்று மெய்சிலிர்த்து பேசினார். மேலும், மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பம்சமாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறையின் சார்பில் வழங்கப்படும் வீடுகள் இனி தலைவிகளின் பெயரில்தான் வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்தார். 

மேலும் படிக்க | வார முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம்: ரூ.40 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News