குற்றாலம் போற ஐடியா இருக்கா ? - இதை தெரிஞ்சுக்கோங்க..!
குற்றாலத்தில் சாரல் காற்றோடு ஆர்பரித்து கொட்டும் அருவி நீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு செல்கின்றனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப்பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளிலும் சாரல் காற்று வீச குளிர்ந்து போனது.இதனால் தமிழகம் முழுக்க இருந்து குற்றாலம் வரும் சுற்றலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஈரோடு,கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் சென்னை,வேலூர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வாட்டி எடுக்கும் வெயில் மெல்ல மெல்ல தலைவிரித்தாடுகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் கோடை விடுமுறையை கொண்டாட ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு கிளம்பியுள்ளனர். இந்நிலையில், திருநெல்வேலி,தூத்துக்குடி,விருதுநகர் சுற்றுவட்டார மக்கள் குற்றாலத்தில் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு முதல் குற்றாலம் மலைப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று மெயின் அருவியில் தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்தது. அருவியில் விழுந்த தண்ணீரில் கற்கள், மரக்கட்டைகள் அடித்து வரப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவியில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். அருவிக்குச் செல்லும் வழியில் பேரிக்காட் மற்றும் கயிறு மூலம் தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலாப்பயணிகள் சாரல் மழையில் நனைந்து கொண்டே அருவியை ஏக்கத்துடன் பார்த்து சென்றனர்.
மேலும் படிக்க | தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை துன்புறுத்திய காவலர்கள்..!
இதற்கிடையே, மாலை நெருங்க தண்ணீர் வரத்து மெல்ல மெல்ல குறைந்தது. இதனால் அருவிகளில் குளிக்க தடை நீக்கப்பட்டது. இதனால் குற்றாலம் வந்திருந்த பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். அருவிகளில் குளித்து உற்சாகமடைந்தனர்.
மேலும் படிக்க | 'ஒரு பேட்டரி ஏற்படுத்திய பேரழிவு' - பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR