தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை துன்புறுத்திய காவலர்கள்..!

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை, பெண் காவலர்கள் துன்புறுத்திய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : May 18, 2022, 05:05 PM IST
  • பக்கத்து வீட்டில் நகை திருடு போன விவகாரம்
  • விசாரணை அழைத்து செல்லப்பட்ட பெண் துன்புறுத்தல்
  • காவலர்கள் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை துன்புறுத்திய காவலர்கள்..! title=

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (45), இவரது வீட்டில் கடந்த 4ம் தேதி 10 பவுன் நகை மாயமானது.இது தொடர்பாக அவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சண்முகம் மனைவி சுமதி (40) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக பிரபாகரன் புகாரில் தெரிவித்துள்ளார்.

Thoothukudi,Investigation,Lady police,Crime,Suspend,தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை துன்புறுத்திய காவலர்கள் சஸ்பெண்ட்

இதையடுத்து கடந்த 7ம் தேதி பெண் காவலர்கள் மெர்சினா, கல்பனா, உமா மகேஸ்வரி ஆகிய மூவரும் சுமதியை முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சுமதியை காவலர்கள் மூவரும் சேர்ந்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.  பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இதில் காயம் அடைந்த சுமதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் பெண் காவலர்கள் தன்னை துன்புறுத்தியதாக அவர் கடந்த 11ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். விசாரணையில், புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது. 

மேலும் படிக்க | தமிழின படுகொலை... ட்விட்டரில் ட்ரெண்டாகும் JusticeForTamilGenocide ஹேஷ்டேக்

இதையடுத்து  பெண் காவலர்கள் மூவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்தும், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத தனிப்பிரிவு காவலர் முருகன் என்பவரை  ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரியாக இருந்த உதவி ஆய்வாளர் முத்துமாலை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை, பெண் காவலர்கள் துன்புறுத்திய விவகாரம் தூத்துக்குடியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | 'ஒரு பேட்டரி ஏற்படுத்திய பேரழிவு' - பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News