சிலிண்டர் வினியோகம் செய்பவருக்கு கூடுதலாக பணம் வழங்க வேண்டாம் என இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘கியாஸ்’ சிலிண்டர் விநியோகிப்போர், வீடுகள்தோறும் 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வலுக்கட்டாயமாக வசூலிக்கின்றனர்.


இந்நிலையில் சிலிண்டர் வினியோகம் செய்பவருக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டாம் என இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 


இண்டேன் சிலிண்டர்கள், தரம் மற்றும் எடை பரிசோதனை உறுதி செய்யப்பட்ட பின்னரே பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ரசீதில் உள்ள விலைக்கு மேல் டெலிவரி செய்பவருக்கு தொகை எதுவும் கொடுக்க வேண்டாம். ரசீதில் உள்ள விலைக்கு மேல் பணம் கேட்டால் இண்டேன் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் விபத்து மற்றும் கசிவு போன்ற அவசர உதவிக்கு 1906 என்ற எண், மற்ற புகார்களுக்கு 18002333555 என்ற இலவச எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.