குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்... காலி குடங்களுடன் நடத்திய போராட்டம்!
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பெத்திகுட்டை பகுதியில் ஒருமாதமாக குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இரும்பறை ஊராட்சி பகுதி மக்களுக்கு சிறுமுகை அருகே உள்ள மூலையூர் பகுதியில் பவானி ஆற்றில் இருந்து குடி தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யபட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் அண்மையில் புதிதாக திருப்பூர் மாநகருக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டம் துவங்க பட்டதால் ஆற்றில் தண்ணீர் முழுவதும் வற்றி விட்டது. அத்துடன் திருப்பூர் குடிநீர் திட்டத்திற்காக தடுப்பனையும் ஏற்படுத்தப்பட்டு தண்ணீர் போக்கே தடைபட்டு விட்டது.
நடவடிக்கை ஏதும் எடுக்காத மாவட்ட நிர்வாகம்
இதனால் கீழ் பகுதிக்கு தண்ணீர் வராமல் மூளையூர் குடிநீர் திட்டம் முடக்க பட்டு அங்கிருந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் தண்ணீர் எடுக்க முடியாமல் தண்ணீர் வினியோகம் நிறுத்த பட்டு விட்டது இதனால், இரும்பறை, பள்ளேபாளையம், இலுப்பநத்தம் உள்ளிட்ட ஆறு ஊராட்சி மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். இதற்கு மாற்று ஏற்பாடாக திருப்பூர் குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீரை பிரித்து தர ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்தும் இதுவரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இதனால் குடி நீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர்.
காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள்
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக முறையாக தண்ணீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் பெத்திகுட்டை பகுதியில் சிறுமுகை சத்தி சாலையில் அந்த வழியாக வந்த அரசு பேருந்தை வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே ஆற்றில் தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் கடந்த மாதம் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு ராட்சத குழாய்களில் தண்ணீர் எடுக்கும் திட்டம் செயல்படுத்த பட்டு தண்ணீர் எடுத்து வருவதால் கீழ் பகுதி குடி நீர் திட்டங்களுக்கு தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டது. இதனால் ஆறு ஊராட்சி பகுதி மக்கள் குடிக்க தண்ணீர் இன்றி இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்
எனவே தங்கள் பகுதிக்கு தண்ணீர் வழங்க திருப்பூர் குடி குடி நீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன் போலீசார் அங்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் கடுமையாக அதிகாரிகளிடம் வாக்கு வாதம் செய்த நிலையில் நான்கு நாட்களில் திருப்பூர் குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ