சுகாதாரமான குடிநீர் வேண்டி கிணற்றில் இறங்கி போராடிய பொதுமக்கள்
சேலம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் தாசநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ளது காமராஜர் காலனியில் மாசடைந்த நீரை வெளியேற்றக் கோரி கிணற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
சேலம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் தாசநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ளது காமராஜர் காலனியில் சுமார் 400 மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளில் இருந்து கழிப்பிட நீர் நேரடியாக நிலத்திற்குள் திறந்து விடுவதால் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனால் அங்கு உள்ள கிணறு முழுவதும் மாசடைந்து புழு நிறைந்து குடிநீர் முழுவதும் மாசடைந்து உள்ளது. இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர், இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கடந்த திங்கட்கிழமை அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மாசு அடைந்த நீருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.
மேலும் படிக்க | மருந்து தட்டுப்பாடே இல்லை போலியாக வதந்திகளை பரப்புவது ஏன்? அமைச்சர் காட்டம்
இந்த நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் காமராஜர் காலனியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென மாசடைந்த அந்த கிணற்றுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உடனடியாக கழிவுநீர் கலக்கும் கிணற்றை சுத்தப்படுத்தி பொது மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என கோசங்கள் எழுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மல்லூர் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அதிகாரிகள் இன்னும் 10 நாட்களுக்குள் கிணறு சுத்தம் செய்யப்பட்டு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதற்கிடையில் பொதுமக்கள் ஈடுபட்ட போராட்டத்தால், சேலம் தாசநாயக்கன்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
மேலும் படிக்க | எஸ்டிபிஐ அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை; சீமான் கடும் கண்டனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ