குடிநீர் வசதி இல்லாததால் குடிசை மாற்று வாரியத்தில் வசிக்கும் மக்கள் அவதி

குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளை ஆய்வு செய்து குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அங்கு வசிக்கின்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 23, 2021, 11:55 AM IST
  • ரூ.1810.86 லட்சம் மதிப்பில் 172 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது.
  • "போதிய குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி.
  • மாவட்ட நிர்வாகம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
குடிநீர் வசதி இல்லாததால் குடிசை மாற்று வாரியத்தில் வசிக்கும் மக்கள் அவதி title=

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படுகின்ற அபாயகரமான பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசைகள் அமைத்து அங்கு வசித்து வந்தனர். இந்நிலையில் அந்த பகுதி அபாயகரமான பகுதி என்பதால் "குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.1810.86 லட்சம் மதிப்பில் குடிசைகள் அகற்றப்பட்டு மறு வாழ்வதாரத்தை அமைக்கும் விதத்தில் "தமிழக அரசு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் உதகை (Udhagamandalam) அருகே கேத்தி பேரூராட்சி, பிரகாசபுரம் பகுதியில் ஒரு இடத்தை தேர்வு செய்து கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவ்விடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.

"ரூ.1810.86 லட்சம் மதிப்பில் 172 அடுக்கு மாடி குடியிருப்புகள் அந்த இடத்தில் கட்டப்பட்டது. இதில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குன்னூர் (Koonur)நொண்டி மேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிரகாசபுரத்தில் கட்டப்பட்ட குடியிருப்பில் 93 குடும்பங்களைச் சேர்ந்தர்களுக்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi palanisamy) மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி (S.P.Velumani) ஆகியோர் முன்னிலையில் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

பின்பு அந்த குடியிருப்பில் பயனாளிகள் குடியேறினர். ஆனால் இப்போது குடியிருப்புகளில் "போதிய குடிநீர் வசதி இல்லாததால் அங்கு வசிக்கின்ற பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இது தவிர அங்கு மேலும் ஒரு சில பணிகள் முழுமையடையமால் உள்ளதாலும் போதிய குடிநீர் வசதி இல்லாத காரணத்தினாலும் அம்மக்கள் பெரும் சிரமத்திற்கு தற்போது உள்ளாகி வருகின்றனர்.

எனவே இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு "குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளை ஆய்வு செய்து குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அங்கு வசிக்கின்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News