பாளையங்கோட்டை : தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதலே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இன்னும் சில இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.  இவ்வாறு நடைபெற்ற தேர்தலில் பல்வேறு விதமான சுவாரஸ்யமான பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், கோவை மாவட்டத்தில் 13 உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் கார் சின்னத்தில் போட்டியிட்ட கோவை வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி துணைத் தலைவர் கார்த்தி ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றார்.  இந்நிலையில் அவரது குடும்பத்திலேயே 5 வாக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவத்தால் கவரப்பட்ட நெட்டிசன்கள் வலைத்தளங்களில் இதுகுறித்த மீம்ஸ்களை தெரிக்கவிட்டனர்.  பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 10-வது வார்டில் போட்டியிட்ட அமமுகவை சேர்ந்த வேட்பாளரின் ஓட்டு வேறொரு வார்டில் இருந்ததால் தனது ஓட்டை கூட தனக்கு செலுத்த முடியாத அவல நிலை அவருக்கு ஏற்பட்டது.



இந்நிலையில், 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் ஒரு 90 வயதான மூதாட்டி . இவரின் பெயர் பெருமாத்தாள். இவர், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.  90 வயதாகும் இந்த பாட்டி பரபரப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரது இந்த உழைப்பு வீண் போகவில்லை. கிராம மக்கள் அனைவரும் வாக்களித்து பெருமாத்தாள் பாட்டியை ஊராட்சித் தலைவராக தேர்வு செய்துள்ளனர். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரின் டெபாசிட்டையும் அடித்து துவம்சம் செய்துள்ளார் என்றேதான் சொல்ல வேண்டும்.


மேலும்,வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொண்ட பெருமாத்தாள் பாட்டி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு தன்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளார்.போட்டியில் பாட்டி ஜெயித்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


ALSO READ திமுக புறவாசல் வழியாக வெற்றி பெற்றுள்ளது: EPS-OPS கூட்டறிக்கை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR