பெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைப்பு!
பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பு
பெட்ரோல் மீது ரூ. 8ம், டீசல் மீது ரூ. 6ம் மத்திய அரசின் கலால் வரி குறைக்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலையில் ரூ. 9.50ம், டீசல் விலையில் ரூ. 7ம் குறையும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ் 9 கோடி பயனாளிகளுக்கு ஒரு காஸ் சிலிண்டருக்கு (12 சிலிண்டர்கள் வரை) ₹ 200 மானியமாக வழங்குவோம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | உலக தரம் வாய்ந்ததாக மாறப்போகும் எழும்பூர் ரயில் நிலையம்!
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் உயர்ந்தது. கிட்டத்தட்ட தமிழகத்தில் 110 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விளையும் பல மடங்கு உயந்தது. சிறிய பொருட்களின் விலைகூட இதனால் பல மடங்கு உயர்ந்தது. இந்த விலை உயர்வை சமாளிக்க முடியாமல் சாமானியர்கள் திணறி வந்தனர்.
இந்த சூழலில் தற்போது மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக பெட்ரோல் விலையில் மாற்றம் இன்றி வந்த நிலையில் இன்று விலை குறைக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க | பெகாசஸ் உளவு விவகாரம்...விசாரணைக்குழுவுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR