ஹெச்.ராஜா வெளியிட்ட புகைப்படம்! கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
தேசிய அளவில் பேச்சு பொருளாக மாறியுள்ள ஆதினங்கள் பட்டிண பிரவேசம் தொடர்பான விவகாரத்திற்கு பின்னால் பாஜகவினர்தான் உள்ளனர் என்ற கருத்துகள் உலா வரும் நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வாடிகனில் போப் நகர் வலம் வருவதுபோன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இதற்கு தமிழக அரசின் பதில் என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அவரின் இந்த பதிவிற்கு கீழே கமெண்ட் பாக்சில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
அதில், குறிப்பாக ஒருவர் கூறியுள்ள தகவல் என்னவென்றால், சிம்மாசன பல்லக்கில் கத்தோலிக்க மத தலைவரான போப்பை தூக்கிக் கொண்டு நகர்வலம் வரும் சடங்கு கடந்த 1978 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். மேலும், இரண்டாம் போப் ஜான் பால் பொறுப்பேற்ற உடனே பல்லக்கு தூக்கும் சடங்கானது வருத்தத்தை அளிக்கும் விதமாக உள்ளது எனக்குறிப்பிட்டு அவரே நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இவரை தொடர்ந்து பலரும் எச்.ராஜாவின் இந்த பதிவிற்கு கிண்டலாகவும், திட்டியும் பதில் அளித்துள்ளனர்.
மேலும் படிக்க | எருமை மாடும்தான் கருப்பு அதுக்காக அது திராவிடரா? சீமான் கேள்வி
அதில், ஒருவர் குறிப்பிட்டுள்ள கருத்து என்னவென்றால், இது ரோமில் என்றோ நடந்த சடங்கு, அதை சாட்சியாக வைத்துக்கொண்டு தமிழகத்தில் கலவரத்தை தூண்ட வேண்டாம் எச்.ராஜா அவர்களே என தெரிவித்துள்ளார். இதேபோல பலரும் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வரும் நிலையில் இதற்கு எச்.ராஜாவின் பதில் என்னவாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு தேசிய கட்சியின் செயலாளராகவும், மூத்த தலைவராகவும் உள்ள எச்.ராஜா ஒரு கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்கு முன்பு ஆராயமாட்டாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மனிதனை மனிதனே தூக்கும் நிலையை தவிற்க வேண்டும் என தமிழக அரசு அதற்கான தடையை பிறப்பித்துள்ள நிலையில், மத சடங்குகள் தொடர்பான நிகழ்வுகளில் அரசு ஆதிக்கத்தை காண்பிக்க கூடாது என ஆதினங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு அதிமுக, பாமக உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவும் தெரிவித்து வருகின்றன. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள தமிழ் சைவப் பேரவைத் தலைவர் கலையரசி நடராஜன், இந்த விவகாரத்தின் பின்னணியில் பா.ஜ.கதான் முன்னின்று கலகத்தைத் தூண்டி விடுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ''இந்த விவகாரத்தில் தமிழக அரசின் பங்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் பா.ஜ.க எப்போதுமே அமைதியாக இருக்காது எனவும் விமர்சித்துள்ளார். இதனால் தனக்கு மிரட்டல் வருவதாக கூறியுள்ள அவர் தனது கருத்துக்காக உயிரே போனாலும் கவலை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு இடையில்தான் எச்.ராஜா பாப் ஆண்டவரை பல்லக்கில் தூக்கி செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
மேலும் படிக்க | தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்; மயிலாடுதுறையில்ன் பரப்பரப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR