வேலூர் மாவட்டம்: குடியாத்தம் நகராட்சி உள்ள 36 வார்டுகளுக்கு வேட்புமனு தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் இன்று பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் குடியாத்தம் நகராட்சி அலுவலகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலுக்கு நகராட்சி அலுவலகம் எதிரே குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


ALSO READ | அட்ராசிட்டி தாத்தாவின் ஜாலி குத்தாட்டம்! வைரலான வீடியோ



பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த குடியாத்தம் டிஎஸ்பி சாலையில் வயதான மூதாட்டி ஒருவர் நடந்து வந்தார். அப்போது முதாட்டி அணிதிருந்த  செருப்பு அறுந்து விட்டது.


முதாட்டி கையில் பை வைத்திருந்ததால் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார். இதனைக் கவனித்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி உடனடியாக மூதாட்டி அணிந்திருந்த செருப்பை கழற்றி சரி செய்து மீண்டும் மூதாட்டி காலில் செருப்பை மாட்டி விட்டார். தற்போது அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.



ALSO READ | வயசுலாம் ஒரு விஷயமா...! அற்புத வீடியோ -WATCH


 



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR