நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் வீட்டில் பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன ?
NEET Exam Suicide : ஒரு தேர்வு. தமிழ்நாடு மாணவர்களிடையே இவ்வளவு அச்சத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், அவர்களின் உயிரையும் பறிக்கும் அளவுக்கு அதன் வீரியம் இருக்கிறதென்றால், அது தமிழ்நாட்டுக்குத் தேவையா ? தேவையில்லையா ?!
90களின் பிற்பகுதியில்தான் தேர்வு பயம் என்ற ஒன்றே உருவாகி வந்திருக்கும் என தோன்றுகிறது. அதற்கு முந்தைய தலைமுறை தேர்வை வெகு இயல்பாகத்தான் கடந்து வந்திருக்கிறார்கள் போல. அல்லது இவ்வளவு சமூக அழுத்தம் தேர்வின் மீது அந்தத் தலைமுறைக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. ‘பரீட்சைல ஃபெயில் ஆயிட்டா என்ன ஆகுறது’ போன்ற உளவியல் ரீதியான தாக்குதல் சொற்கள் 90களின் பிற்பகுதியில் அதிகரிக்கத் தொடங்கியது.
மேலும் படிக்க | “இனிமேலாவது இதை பண்ணுங்க” கமல்ஹாசன் கண்ணீர்
மக்கள் தொகை பெருக்கமும், சமூகப் பொருளாதாரத்தில் வேலை வாய்ப்பு அதிகரிப்பும், படித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால் இடத்தை நிரப்புவதற்கான தகுதிப் போட்டி பதட்டமுமே வளரும் தலைமுறை மாணவர்களுக்கு பெரும் சமூக அழுத்தத்தை உண்டுவிட்டது என சமூக ஆர்வலர்கள் ஓர் கருத்தை முன்வைக்கின்றனர்.
எது எப்படியோ, நீட் என்கிற இந்தத் தேர்வு, அறிமுகமானதில் இருந்து தற்போது வரை பல மாணவர்களை காவு வாங்கியிருக்கிறது. நீட் தேர்வை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநர் மாளிகையில் உறங்கிக் கொண்டிருக்கிறது.
சரி விஷயத்துக்கு வருவோம். பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இந்தாண்டுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேர்வு முடிவும் வெளியாகிவிட்டது. தேர்வு முடிவு வெளியான நாளில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பது போல் இருப்பதாகவும், மாணவர்கள் எந்தவிதமான முடிவையும் எடுத்துவிடக்கூடாது என்பதில் ரொம்பக் கவனத்துடனும், அச்சத்துடனும் இருந்நத்தாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டியளித்தார்.
தமிழ்நாடு அச்சமடைந்த மாதிரியே நீட் தேர்வு வெளியான மறுநாளில், சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயலில் நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை செய்துகொண்டார். மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயம் இருந்தாலும் முதலில் மாணவர்களின் பெற்றோர்களுக்கே கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதற்காக சில வழிகளையும், ஆலோசனைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
உளவியல் நிபுணர்கள் சொல்வது என்னென்ன ?
1. தங்கள் குழந்தைகளின் மன ஓட்டத்தை புரிந்துகொண்டு அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகமூட்ட வேண்டியது பெற்றோரின் கடமை
2. நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்களை மனம் தளராமல் பார்த்து கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு. பல மாணவர்களின் மருத்துவ கனவு பொதிந்திருப்பது என்னவோ இந்த ஒற்றை தேர்வுக்குள் தான். நீட் என்ற இந்த ஒற்றை தேர்வால் உங்கள் மருத்துவ துறை ஆர்வத்தை சிதைத்துவிட முடியாது என்பதே உண்மை. இதை புரிந்து கொண்டாலே போதும். எதையும் சாதிப்பது மிக எளிது.
3. பொதுவாக நாம் எதிர்பார்த்த ஒன்று நடைபெறாவிட்டால் மனம் தளர்ந்து போகக்கூடும். அந்த வேளையில் நாம் தவறான முடிவுகளை நம்மை அறியாமலேயே எடுத்துவிட நேரிடலாம். இதனால் தான் தேர்வு முடிவுகள் வெளியான முதல் 72 மணி நேரம் மிக முக்கியம்.
மேலும் படிக்க | வீட்டில் உயிரிழந்த தந்தையின் உடல் - 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மகன்
4. ஒருவேளை மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், மன தத்துவ நிபுணரை சந்தித்து மனம் விட்டு பேசினால், மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும்.
5. பல மாணவர்கள் இரண்டு, மூன்று முறை தேர்வு எழுதி வெற்றிபெற முடியாமல் மனம் சோர்வடைகின்றனர். அந்த நேரம் பெற்றோர்கள் அவர்களை மனம் தளராதவாறு ஊக்கப்படுத்தி அவர்களை சாதாரண மன நிலைக்கு கொண்டுவர வேண்டும்.
6. மாணவர்களுக்கு தேர்வில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காமல் போனால், அவர்களை பெற்றோர் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும். தேர்வு குறித்து மாணவர்கள் மனம் விட்டு பேசுவதற்கு நாங்கள் இருக்கிறோம். மாணவர்கள் எப்போது அணுகினாலும் ஆலோசனை வழங்க தயாராக இருக்கிறோம்.
7. குறிப்பாக தங்கள் குழந்தைகளின் மன ஓட்டத்தை புரிந்துகொண்டு அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகமூட்ட வேண்டியது பெறோருடைய கடமை. இதை, ஒவ்வொரு பெற்றோரும் புரிந்துகொண்டாலே போதும். மாணவர்களின் வெற்றிப்பயணம் தங்கு தடையின்றி தொடரும்.
வெற்றி என்பது வாழ்வின் ஒரு பகுதிதானே. அதுமட்டுமே வாழ்க்கையா என்ன ?!.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ