பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அகத்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அண்மையில் பாஜகவில் இணைந்த சரத்குமார், நடிகை ராதிகா மற்றும் விளவங்கோடு முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். இதனையடுத்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி ஊழல் கூட்டணி என விமர்சித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. மக்களவைத் தேர்தல் தேதி நாளை மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும்


பிரதமர் மோடி பேசும்போது, " தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனை அகற்றி பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இந்தியா கூட்டணி ஊழல் செய்வதற்காக அமைதுள்ள கூட்டணி. ஊழல் செய்த வரலாறுகளை கொண்டவர்கள் இணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்பதே இலக்கு. 2ஜி ஊழலில் பெரும்பங்கு வகித்தது திமுக தான்" என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.


தொடர்ந்து பேசிய அவர், " தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன. பெண்களுக்கு மதிப்பு கொடுக்கும் ஒரே கட்சி பாஜக தான். திமுக - காங்கிரஸ் செய்த தவறுகளுக்கு கணக்கு கூறியே ஆக வேண்டும். ராமர் கோயில் திறப்பு விழாவைக் கூட தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு தமிழ்நாட்டில் தடை விதித்தனர். இதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. தமிழ்நாட்டின் பெருமைகளை காப்பதில் பாஜக முன்னணியில் இருக்கிறது." என ஆவேசமாக பேசினார். 


பிரதமர் மோடி வருகையையொட்டி கன்னியாகுமரியில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஹெலிக்காப்டர் மூலம் கேரள மாநிலம் பத்தினதிட்டா சென்றடைந்தார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.


மேலும் படிக்க | மதச் சண்டையை ஏற்படுத்தி மீண்டும் பிரதமராக நினைக்கிறார் மோடி - ஆ.ராசா எம்பி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ