இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழரைப் போல நடந்து கொள்கிறார், தமிழர்களின் கலாச்சாரத்தை உலகெங்கிலும் பரப்புகிறார் என  முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மன்னர் திருமலை நாயக்கரின் 439 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 


பின்னர் செய்தியாளர்களிடம் செல்லூர் கே.ராஜு பேசுகையில், "பாதுகாப்பு கருதியே குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார வாகன ஊர்திக்கு (Tamil Nadu Tableau) அனுமதி வழங்கப்படவில்லை என சொல்கிறார்கள். தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவிலும் அலங்கார வாகன அணிவகுப்பு இல்லை.


திமுக அமைச்சரவையில் 6 அமைச்சர்கள் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இருந்தும் ஒருவர் கூட மன்னர் சிலைக்கு மரியாதை செலுத்த வரவில்லை. தமிழக கலாச்சாரத்தை பிரதமர் பிரதிபலித்தது வருகிறார். வட மாநில சேர்ந்தவராக இருந்தாலும் தமிழர் போல பிரதமர் நடந்து கொள்கிறார். 


ALSO READ | தமிழக அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது ஏன்? முதல்வருக்கு பாதுகாப்பு அமைச்சர் கடிதம்


தமிழகத்துக்கு எதிராக பிரதமர் (PM Modi) நடத்து கொள்ளவில்லை. தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ளவில்லை. தமிழர்களின் பணியை உலகுக்கு எடுத்து காட்டும் விதமாக இந்திய அரசு செயல்படுகிறது. தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு எந்தவொரு நிலைபாட்டையும் எடுக்காது என திண்ணமாக கூறுகிறேன்.


எந்தவொரு பிரதமரும் தமிழர்களின் கலாச்சாரம், பெருமையை உலகுக்கு சொன்னதில்லை. பிரதமர் மோடி தமிழர்களின் பெருமையை உலக அரங்கில் நிலை நிறுத்தி வருகிறார். பிரதமரைப் பற்றி கனிமொழி எந்த நிலைபாட்டில் கூறுகிறார் என தெரியவில்லை. சிறுபான்மை வாக்குகாக முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) ரகசியமாக பாஜகவுடன் உறவு வைத்துள்ளார். பிரதமர் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை தந்து உள்ளார்" என கூறினார்.


ALSO READ | ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்; காவல்துறை தீவிர விசாரணை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR