PM Modi Called MK Stalin: தமிழ்நாட்டில் இந்த டிசம்பர் மாதத்தை யாராலும் மறக்க இயலாது எனலாம். தமிழ்நாட்டின் வரலாற்றில் டிசம்பர் மாதத்தில் பல பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது, அதில் இந்த மாதத்தில் ஏற்பட்ட பேரிடரும் யாராலும் வருங்காலங்களில் மறக்கவே முடியாது எனலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறக்க முடியாத டிசம்பர்


டிச 2, 3, 4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயலால் (Michaung Cyclone) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, டிச.17, 18 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி (TN South District Rain Damage) ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை காரணமாக அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல கிராமங்கள், விளைநிலங்கள் நீரில் மூழ்கிய நிலையில் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். 


10 பொறுப்பு அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் களத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். அந்தளவிற்கு, நெல்லை, தூத்துக்குடியில் பாதிப்புகள் அதிகமாக உள்ளன.


மேலும் படிக்க | தூத்துக்குடி வரும் நிர்மலா சீதாராமன்..! பின்னணி இதுதான்..!


மேலும், விவாசய நிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் களத்தில் இருப்பதாகவும், 2,500 மருத்துவ முகாம்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.  


பிரமதர் மோடி உறுதி


இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) இன்று வெளியிட்ட X பதிவில்,"மிக்ஜாம் புயலுக்கு அடுத்த தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் குறித்து விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக அழைத்து பேசினார். சில கட்டுப்பாடுகளை சந்தித்த போதிலும், மாநில அரசு மேற்கொண்ட சீரிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அவருக்கு விளக்கி, மத்திய அரசிடம் இருந்து உடனடி நிதி உதவியை நாடினேன். 



மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள் ஆகிய இரட்டை பேரிடர்களை எதிர்கொள்ள மத்திய அரசின் ஆதரவு இருக்கும் என பிரதமர் உறுதியளித்ததோடு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வெள்ள நிலைமையை மதிப்பிடுவதற்கு அனுப்புவதாகவும் தெரிவித்தார்" என குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நாள்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசை குற்றஞ்சாட்டியிருந்தார். அதில் வெள்ள நீர் வடிகால் குறித்தும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் அவர் பல்வேறு புகார் கருத்துகளை தெரிவித்திருந்தார். அதற்கு பல தமிழ்நாடு அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வந்த நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் இப்பதிவை இட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | 'நிர்மலா சீதாராமன் சொன்னது தவறானது...' ஒரே போடாக போட்ட தமிழக அமைச்சர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ